சுடச் சுடச் செய்திகள்

திருக்குறள் கற்பித்து கைதிகளை நல்வழிப்படுத்தும் சிறை அதிகாரி

உடுமலை: நாம், நம் குடும்பத்தினர், நம் உற்றார் உறவினர்கள் மட்டும் நன்றாகயிருக்கவேண்டும் என்று தான் சுயநலவாதிகளாய் பலரும் பல நேரங்களில் சிந்திப்பர். இவர்களில் இருந்து வித்தி யாசப்பட்டு விளங்குகிறார் ஒரு காவல் அதிகாரி. அவர் சிறைக்கைதிகள் பலருக் கும் திருக்குறளைப் போதித்து, அவர்களும் ஒரு நல்ல வாழ்க் கையை சிறப்பாக வாழவேண்டும் என்று பாடுபட்டு வருகிறார். தினமும் திருக்குறளை போதித்து சிறைக்கைதிகளை நல்வழிப்படுத்தி வரும் உடுமலை கிளைச்சிறையின் சார்பு சிறை அலுவலரான அண்ணாதுரை, அதிபர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

2011ல் சிறந்த சேவைக்காக முதல்வர் விருது பெற்ற இவருக்கு, வரும் குடியரசு தினத்தன்று அதி பர் விருது வழங்கப்பட உள்ளது. “இங்கு வரும் கைதிகளை நல்வழிப்படுத்த யோகா, திருக்குறள் போதனை வகுப்புகள் நடத்தப்பட்டு வரு கின்றன. இலவச சட்ட உதவி மையத் தின் மூலம் கைதி களுக்கு பல்வேறு உதவிகளையும் செய்துவருகிறோம்,” என்கிறார் அண்ணா துரை. உடுமலை கிளைச் சிறையின் சார்பு சிறை அலுவலராக 2015ஆம் ஆண்டு பொறுப்பேற்ற சு.அண்ணாதுரை சிறையில் பல்வேறு சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டார். பாழடைந்து கிடந்த கட்டடங்கள் சீரமைக்கப்பட்டதுடன் உட்புறம், வெளிப்புறத்திலும் சிவப்பு வர்ணம் பூசப்பட்டு தற்போது புதுப்பொலி வுடன் காட்சி அளிக்கிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon