லயன்ஸ் காட்டும் முனைப்பு; அசந்துபோன எரிக்சன்

பகலோட்: சுசுகி கிண்ணக் காற்பந்துப் போட்டியில் பிலிப்பீன் சுடன் சிங்கப்பூர் இன்றிரவு மோதுகிறது. இந்த ஆட்டம் பிலிப்பீன்சின் பகலோட் நகரில் நடைபெறுகிறது. கடந்த வெள்ளிக்கிழமையன்று சிங்கப்பூர் அதன் முதல் ஆட்டத் தில் இந்தோனீசியாவை 1-0 எனும் கோல் கணக்கில் வீழ்த்தியது. அந்த ஆட்டத்தை பிலிப்பீன்சின் புதிய பயிற்று விப்பாளர் சுவென்=கோரன் எரிக் சன் பார்த்தார். எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்கிய சிங்கப்பூர் குழுவைப் பார்த்து அவர் அசந்துபோயிருக்கிறார்.

இன்றைய ஆட்டத்துக்கு முன்னதாக நேற்று பகலோட் நகரில் உள்ள 'செடா கெபிட்டோல்' ஹோட்டலில் செய்தியாளர் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய எரிக்சன் சிங்கப்பூர் குழுவை வெகுவாகப் பாராட்டினார். "சிங்கப்பூர் குழுவைப் பார்த்து நான் பிரமிப்படைகிறேன். அவர் களைப் பார்த்து எனக்குப் பயம் இல்லை. ஆனால் எனது எதிரணிக்கு நான் தகுந்த மரியாதையைத் தர வேண்டும். "இக்சான் ஃபாண்டி மூலம் சிங்கப்பூருக்கு நல்ல தாக்குதல் ஆட்டக்காரர் கிடைத்துள்ளார்.

"இடக்கோடியிலிருந்தும் வலக் கோடியிலிருந்தும் தாக்குதல் நடத்தும் ஃபாரிஸ் ரம்லியும் கேப்ரியல் குவேக்கும் மிகவும் வேகமாக விளையாடக்கூடிய வர்கள். சிங்கப்பூர் வீரர்கள் ஒன்று இணைந்து மிக அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார் கள். சிங்கப்பூரைத் தோற்கடிக்க வேண்டுமாயின் நாங்கள் மிகச் சிறப்பாக விளையாட வேண்டி வரும்," என்று முன்னாள் இங்கிலாந்து நிர்வாகி எரிக்சன் தெரிவித்தார். பிலிப்பீன்ஸின் சில ஆட்டக்காரர்கள் ஐரோப்பிய குழுக் களுக்காக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் கூட்டத்தில் பிலிப்பீன்ஸ் பயிற்றுவிப்பாளர் சுவென்-கோரன் எரிக்சனுடன் (இடது) கைகுலுக்கும் ஃபாண்டி அகமது. இன்றைய ஆட்டத்தில் சிங்கப்பூர் வெற்றி பெற்றால் அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாகும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!