அமலா: இது தொடர வேண்டும்

திருமண முறிவுக்குப் பிறகு நல்ல கதைகளாக தேர்வு செய்து நடித்து வருகிறார் அமலா பால். அவரது ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. சமூக வலைத்தளங்களில் அமலாவைப் பின் தொடர்வோர் எண்ணிக்கை தற்போது இருபது லட்சத்தைக் கடந்துள்ளதாம். “20 லட்சம் இன்ஸ்டாகிராம் ரசிகர்களைப் பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. எனது அன்றாட வாழ்க்கையின் ஓர் அங்கமாக இருந்து வரும் ரசிகர்கள் அனைவருக்கும் எனது நன்றி. இது தொடரட்டும். அனைவருக்கும் எனது அன்பைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று அண்மைய பதிவில் குறிப்பிட்டுள்ளார் அமலா.