டிரம்ப்: இந்தியர்கள் பேரம் பேசுவதில் கெட்டிக்காரர்கள்

வா‌ஷிங்டன்: மோடி எனது நல்ல நண்பர். ஆனால், பேரம் பேசுவதில் இந்தியா கடும் போட்டியை அளிக்கக்கூடிய நாடு என்று அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் ஒப்புக்கொண்டுள்ளார். வெள்ளை மாளிகையில் செவ் வாயன்று தீபாவளித் திருநாளைக் கொண்டாடிய டோனால்ட் டிரம்ப் புடன் முக்கிய இந்திய-அமெரிக் கர்களும் கலந்துகொண்டனர். பிரதமர் நரேந்திர மோடியுடனான நட்புக்கு தான் நன்றிக்கடன்பட் டிருப்பதாகவும் டிரம்ப் கூறினார். "இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்ய நாங்கள் மிகவும் பாடுபட்டு வருகிறோம். ஆனால் அவர்கள் நல்ல வர்த்தகர்கள். அவர்கள் நன்றாகப் பேரம் பேசு பவர்கள்," என்றார் டிரம்ப்.

இந்தியாவுடன் இருதரப்பு ஒத் துழைப்பைத் தொடர்ந்து மேம் படுத்த நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். வா‌ஷிங்டன் வெள்ளை மாளி கையில் குத்துவிளக்கு ஏற்றி வைத்து தீபாவளியை அவர் கொண்டாடினார். அப்போது பேசிய டிரம்ப், "இந்தியாவுடனான வர்த்தகத்தை மேம்படுத்த அமெரிக்கா தீவிர முயற்சிகள் எடுத்து வருகிறது. மோடியுடன் நட்பு நீடிப்பதற்கு பெருமைப்படுகிறேன்.

"நாங்கள் நல்ல வர்த்தகர்கள், இந்தியர்கள் பேச்சுவார்த்தை நடத்துவதில் வல்லவர்கள்," எனக் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாது மோடியை விரைவில் சந்தித்துப் பேசவிருப்ப தாகவும் அவர் தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் அர்ஜென்டினாவில் நடைபெறவுள்ள ஜி-20 நாடுகள் உச்சநிலை மாநாட்டில் டிரம்ப்பும் மோடியும் சந்தித்துப் பேசுவதற் கான வாய்ப்புகள் உள்ளன. இதுபற்றி அதிகாரபூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை. எனினும் இந்தச் சந்திப்பை உறுதிப்படுத்தும் வகையிலேயே விரைவில் மோடியைச் சந்தித்துப் பேசவுள்ளதாக டிரம்ப் கூறியுள் ளார் என்று செய்திகள் தெரி விக்கின்றன.

வா‌ஷிங்டன் வெள்ளை மாளிகையில் குத்து விளக்கு ஏற்றி வைத்துத் தீபாவளியைக் கொண்டாடு கிறார் டோனல்ட் டிரம்ப். அமெரிக்கா வுக்கான இந்தியத் தூதர் நவ்தேஜ் சர்னா உள்ளிட்டவர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். படம்: ஊடகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!