ஆசியான் பக்கம் தென்கொரியா கவனம்

தென்கொரியாவின் புதிய தெற்கு நோக்கிய கொள்கை, ஆசியா னுடன் இணைந்து வளப்பம் பெற வலுவான கடப்பாட்டைக் கொண்டிருக்கிறது என்று தென்கொரிய அதிபர் மூன் ஜேயிங் தெரிவித்திருக்கிறார். சிங்கப்பூரில் நேற்று நடைபெற்ற ஆசியான் -தென்கொரியா கூட்டத்தில் பேசிய திரு மூன், அடுத்த ஆண்டு தென்கொரியா வில் நடைபெறவுள்ள சிறப்பு உச்ச நிலைக் கூட்டங்களுக்கு திரு மூன் ஆசியான் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார். ஆசியானுக்கும் தென்கொரி யாவுக்கும் இடையிலான அரச தந்திர உறவு இவ்வாண்டு 30 ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது.

அமெரிக்கா, சீனா, ஜப்பான், ரஷ்யா ஆகிய நாடுகளைச் சார்ந்திருப்பதை குறைத்து இந்தி யாவுடனும் தென்கிழக்காசிய நாடுகளுடனும் உறவுகளை வளர்க்கும் நோக்கத்தை தென் கொரியாவின் புதிய தெற்கு நோக்கிய கொள்கை கொண்டுள்ளது. அடுத்த ஆண்டு தென் கொரியா, கொரிய=ஆசியான் மாநாட்டை வழிநடத்த உள்ளது. மேலும், லாவோஸ், கம்போடியா, மியன்மார், வியட்னாம், தாய்லாந்து ஆகிய நாடுகளுடனான ‘மெக்கோங்’ உச்சநிலை சந்திப்பும் நடத்தப்படும் என்றும் எதிர்பார்க் கப்படுகிறது.

ஆசியான் நாடுகளில் தலை வர்கள் பலரை நேரில் சந்தித்துப் பேசியதாகவும் அடுத்த ஆண்டுக் குள் அனைத்துத் தலைவர்களை யும் சந்திக்க விரும்புவதாகவும் அதிபர் மூன் தெரிவித்தார். தெற்கு நோக்கிய இந்த இலக்கை அடைவதற்கான திட்டத்தை உருவாக்க அதிபர் குழு ஒன்றையும் அமைத்துள்ள தாக திரு மூன் தெரிவித்தார். இது தொடர்பான அண்மைய முயற்சிகள் பலனளித்து வருவதாகக் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்