மகாதீர்: பிரச்சினைகளை சமாளிக்க புதிய யோசனைகள் தேவை

மலேசியாவில் 2019ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் சர்ச்சைக்குரிய புதிய யோசனை கள் குறிப்பிடப்பட்டிருந்த போதி லும் நிதி, மேம்பாடு, நிர்வாகம் தொடர்பிலான பிரச்சினைகளை சமாளிக்க அரசாங்கத்திற்கு புதிய யோசனைகள் தேவைப் படுகின்றன என்று மலேசியப் பிரதமர் டாகடர் மகாதீர் முகம்மது கூறினார். சிங்கப்பூரில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறினார்.

புதிய யோசனைகள் வைத்திருக்கும் ஒவ்வொருவரின் கருத்துகளையும் தமது நிர்வாகம் கேட்டு அறிந்துகொள்ள வேண்டிய அவசியம் இருப்பதாகவும் திரு மகாதீர் கூறினார். “மக்கள் கூறுவதை நான் எப்போதுமே கேட்டு வந்துள்ளேன். ஏராளமான புதிய யோசனைகளை மக்கள் கூறியுள்ளனர்,” என்று திரு மகாதீர் கூறினார். மலேசியாவில் சொந்தமாக கார் தயாரிக்கும் புதிய திட்டம் குறித்து தான் கூறிய யோச னையை பலர் குறை கூறியதை அவர் சுட்டிக்காட்டினார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

அதிபர் தேர்தலில் போட்டியிட அவர் அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்துள்ளார். படம்: ராய்ட்டர்ஸ்

20 May 2019

‘இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடுவது நிச்சயம்’