கேளிக்கை விளையாட்டுகளுடன் கோலாகலமாகத் தொடங்கிய 'கோர்ட்ஸ்' நிறுவனத்தின் ஆண்டிறுதி விற்பனை 

கோர்ட்ஸ் சிங்கப்பூர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பென் டான் (இடப்புறம் நீல நிறச் சட்டையில்), AWWA அமைப்பைச் சேர்ந்த சிறுவன், அவ்வமைப்பின் இடைக்காலத் தலைமை நிர்வாக அதிகாரி ஜே.ஆர்.கார்த்திகேயன் ஆகியோர் ‘கோர்ட்ஸ்’ ஆண்டிறுதி விற்பனை விழாவைத் தொடங்கிவைத்தனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இர்ஷாத் முஹம்மது

சமூகத்தில் உதவி தேவைப்படு வோருக்குச் சேவையளிக்கும் AWWA அமைப்பைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட சிறப்புத் தேவையுடைய சிறுவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் ‘கோர்ட்ஸ்’ நிறுவனத்தின் மாபெரும் கேளிக்கை விழாவில் கலந்துகொண்டு அந்நிறுவனத்தின் ஆண்டிறுதி விற்பனை விழாவைத் தொடங்கி வைத்தனர். 
வீட்டுத் தளவாடப் பொருட்களின் விற்பனை நிறுவனமான ‘கோர்ட்ஸ்’, விளையாட்டு, உணவு, பிரம்மாண்ட விலைக்கழிவுகள், படத் திரையிடல் எனப் பல சுவையான அங்கங்களை உள்ளடக்கிய கேளிக்கை விழாவை அடுத்த நான்கு வாரயிறுதிகளுக்கு நடத்த உள்ளது. 
குறைந்தது $50 செலவிடும் வாடிக்கையாளர்களுக்கு இலவச கேளிக்கை விழா கூப்பன்கள் வழங்கப்படும். அதற்கு மேற்பட்ட கூப்பன்களை வாங்கும்பட்சத்தில் கிடைக்கும் தொகை முழுவதும் AWWA அமைப்பிற்கு வழங்கப்படும். 
சமூகத்தில் உள்ள சிறப்புத் தேவையுடையோருக்கும் வசதிக் குறைந்தோருக்கும் உதவும் வகை யில் அந்த ஆதரவு நிதி விளங்கும். 
‘கோர்ட்ஸ் ஏஷியா’ நிறுவனத்தின் குழுமத் தலைமை நிர்வாக அதிகாரி டெர்ரி ஒ கொன்னர், ‘கோர்ட்ஸ்’ சிங்கப்பூர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பென் டான் இணைந்து நேற்று நடைபெற்ற ஆண்டிறுதி விற்பனை விழாவை தொடங்கி வைத்தனர். 
சமூக நலனைக் கருதி தனியார் நிறுவனங்கள் தங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை சமூகத்திற்காக வழங்குவது வர வேற்கத்தக்கது என்றார் நிகழ்ச்சி யில் பங்கேற்ற AWWA அமைப்பின் இடைக்காலத் தலைமை நிர்வாக அதிகாரி ஜே ஆர் கார்த்திகேயன். 
“அமைப்பின் நிதித்திரட்டு முயற்சிகளின்போது ஒரு குறிப் பிட்ட திட்டத்திற்காக பலர் நிதி ஆதரவு வழங்குகிறார்கள். ஆனால் அமைப்பின் தினசரி செயல்பாடுகளுக்கும் நிதி தேவைப் படுகிறது. 
ஆக, அமைப்பின் நிர்வாகச் செலவினங்களுக்கு இதுபோன்ற தனியார் நிறுவனத்தின் நிதி ஆதரவு பெருமளவில் உதவும்,” என்று கூறினார் திரு கார்த்திகேயன். 
தெம்பனிசில் அமைந்துள்ள ‘கோர்ட்ஸ் மெகாஸ்டோர்’ காட் சிக்கூடத்தில் கேளிக்கை விழா நடைபெற்றாலும் நிறுவனத்தின் சலுகைகள் சிங்கப்பூரிலுள்ள 14 கடைகளிலும் இணையத்திலும் இரண்டு மாதங்களுக்குச் செயல் பாட்டில் இருக்கும்.