அமெரிக்கா, சீனாவுடன் இணைந்து பணியாற்ற ஆசியான் விருப்பம்

இந்தோ-பசிபிக் வட்டாரத்தில் சாம்ராஜ்யத்துக்கோ ஆக்கிரமிப் புக்கோ இடமில்லை என்று அமெ ரிக்கத் துணை அதிபர் மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற 6வது ஆசி யான்-அமெரிக்க உச்சநிலைக் கூட்டத்தில் உரையாற்றிய திரு பென்ஸ், "இந்தோ-பசிபிக் வட்டா ரத்தில் சாம்ராஜ்யத்துக்கோ ஆக் கிரமிப்புக்கோ இடமில்லை என்று நாம் அனைவரும் ஒப்புக்கொண் டுள்ளோம். "உங்களைப் போல, நாங்களும் இந்தோ-பசிபிக் வட்டாரத்தில் உள்ள சிறிய, பெரிய என அனைத்து நாடுகளும் ஒன்று மற் றதன் இறையாண்மைக்கு மதிப்ப ளித்து, பண்புநெறிகளில் நம் பிக்கை கொண்டு, ஒன்றாகச் சேர்ந்து வலுவாக முன்னேறுவ தைப் பார்க்க விரும்புகிறோம்," என்றார்.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்குப் பதிலாக உரையாற்றிய திரு பென்ஸ், "இந்தோ-பசிபிக் வட்டாரத்தின் வளர்ச்சியில் நாங் கள் எந்த நாட்டையும் ஒதுக்க வில்லை. ஒவ்வொரு நாடும் அதன் அண்டை நாடுகளை மதிப்புடன் நடத்த வேண்டும்; நமது நாடுகளின் இறையாண்மையையும் அனைத்துலகச் சட்டத்தையும் மதிக்க வேண்டும்," என்று மேலும் கூறினார். அதன் பிறகு பேசிய சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், அமெ ரிக்க-சீன உறவின் பின்னணியில் ஆசியான்-அமெரிக்கப் பங்காளித் துவம் இருப்பதுபோல் பார்க்கப்படு கிறது. அமெரிக்காவுடனும் சீனாவுடனும் அணுக்கமாகப் பணியாற்ற ஆசியான் விரும்புகிறது," என்று வலியுறுத்தினார்.

நேற்று நடைபெற்ற கிழக்காசிய உச்சநிலைக் கூட்டத்தில் பங்கேற்க வந்த அமெரிக்கத் துணை அதிபர் மைக் பென்ஸ் (இடது), சீனப் பிரதமர் லி கெச்சியாங். படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!