துப்புரவு ஊழியர்களுக்கு கட்டாய போனஸ் திட்டம்

துப்புரவு வேலை செய்வோருக்கு 2020ஆம் ஆண்டு ஜனவரி ஒன்று முதல் வருடாந்தர போனஸ் கிடைக்க உள்ளது. குறைந்தது இரு வார ஊதியத்தை ஆண்டு போனஸாக துப்புரவாளர்களுக்கு வழங்க வேண்டும் என்று துப்புரவாளர் களுக்கான முத்தரப்புக் குழுமம் (டிசிசி) கூறியது.

போனஸ் தொகையின் அளவு, அதை வழங்குவதற்கான கால எல்லை, போனஸ் பெறும் சூழ்நிலைகள் போன்ற விவரங் களை அது நேற்று வெளியிட்டது. படிப்படியான சம்பள உயர்வு முறையில் செய்யப்பட்ட இம்மாற்றத் தைத் துப்புரவு சேவை வழங்கும் நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும். ஒரே நிறுவனத்தில் குறைந்தது ஓர் ஆண்டு பணியாற்றிய சிங்கப்பூரர், நிரந்தரவாசி ஊழியர் கள் இந்த போனசுக்கு தகுதி பெறுவர் என்று டிசிசி அறிக்கை தெரிவித்தது. போனஸ் திட்டத்தை 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் டிசிசி முன் வைத்தது. சுற்றுச்சூழல் பொது சுகாதாரச் சட்டத்தில் மாற்றம் செய்யப்பட் டதைத் தொடர்ந்து இத்திட்டம் சென்ற மாதம் நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

சிங்கப்பூரில் உள்ள 1,300 துப்புரவு நிறுவனங்களில் வேலை செய்யும் 40,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இத்திட்டத்தின்கீழ் பலனடைவர் என்று எதிர்பார்க்கப் படுகிறது. துப்புரவாளர்களின் சம் பளத்தை உயர்த்தும் அதே சமயம், ஒரே முதலாளியிடம் அதிக காலம் பணிபுரிந்து, வாழ்க்கைத்தொழிலில் முன்னேறும் வாய்ப்பை பெருக்கவும் இந்த போனஸ் திட்டம் கைகொடுக் கும். அத்துடன் ஊழியர்களிடையே உற்பத்தித்திறனை வளர்க்கும் நோக்கில் நிறுவனங்களும் அவர் களைப் பயிற்சிகளுக்கு அனுப் புவதில் முதலீடு செய்வதை இத் திட்டம் ஊக்குவிக்கும் என்று டிசிசி கூறியது.

குறைந்தது ஓர் ஆண்டாவது துப்புரவு நிறுவனத்தில் வேலை செய்யும் சிங்கப்பூரர், நிரந்தரவாசி ஊழியர்கள் கட்டாய போனஸ் திட்டத்திற்கு 2020ஆம் ஆண்டு முதல் தகுதி பெறுவார்கள் என்று டிசிசி கூறியுள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!