பென்ஸ்: உற்சாகத்துக்கு ஓர் உதாரணமாகத் திகழும் சிங்கப்பூர்

உலக நாடுகளின் மத்தியில் சிங்கப்பூர் உற்சாகத்துக்கு ஓர் உதாரணம் என்று அமெரிக்கத் துணை அதிபர் மைக் பென்ஸ் நேற்று வர்ணித்தார். "53 ஆண்டுகளில் சிங்கப்பூர் அடைந்துள்ள வெற் றியைக் காண்கையில் மலைப் பாக உள்ளது. சிங்கப்பூர் உச்சத்தை அடைந்துள்ளது. இங்கு இரு சமுத்திரங்கள் சங்கமிக்கின்றன. உலகில் எங்கும் காணாத கண்ணைக் கவரும் அம்சங்கள், வியப்பூட் டும் வெற்றிகள், பெருமைப்படும் வளர்ச்சி. "சிறிய இடத்தில் இவ் வளவு சிறப்புகளைக் கொண் டுள்ள சிங்கப்பூர் உலகுக்கு பெரும் உற்சாகத்தை அளிக் கிறது. "சிங்கப்பூரைத் தனது உத்திபூர்வ பங்காளி, நண்பர் என்று கூறிக்கொள்வதில் அமெரிக்கா பெருமை கொள் கிறது" என்றார் அமெரிக்கா வின் துணை அதிபர் மைக் பென்ஸ்.

சிங்கப்பூருக்கு அதிகாரத்துவ பயணமாக வந்துள்ள அமெரிக்கத் துணை அதிபர் மைக் பென்ஸ், அவரது துணைவியார் கேரன் பென்ஸ் (நடுவில்) இருவரையும் கௌரவிக்கும் வகையில் நேற்று புதிய ஆர்க்கிட் மலருக்கு அவர்களின் பெயர் சூட்டப்பட்டது. அதன் பெயர் 'பெப்பிலியோனன்டா மைக் பென்ஸ் அண்ட் கேரன் பென்ஸ்'. பிரதமர் லீ சியன் லூங்கும், திருமதி லீயும் உடன் உள்ளனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!