தென் மாவட்டங்களில் அதிக பாதிப்பு

நாகப்பட்டினம்: வரும், ஆனால் வராது என்று அப்படியும் இப்படியு மாகக் கூறப்பட்ட கஜா புயல் கடைசியில் தென்மாவட்டங்களில் பேயாட்டம் ஆடி, மக்களின் வாழ்க் கையை இருளில் மூழ்கடித்துச் சென்றுள்ளது. கஜா புயலால் பாதிக்கப்பட் டுள்ள தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களில் போர்க்கால அடிப் படையில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் இரு நாட்களுக்குள் மின்சாரம் வழங்கப் படும் என்றும் மற்ற மாவட்டங்களில் இன்று மாலையே மின்சாரம் வழங்கப்படும் என்றும் தமிழ்நாடு மின்னுற்பத்தி, பகிர்மானக் கழகம் தெரிவித்துள்ளது.

கஜா புயல் கரையைக் கடந்த போது வீசிய பலத்த காற்றால் 12,000 மின்கம்பங்கள், 112 துணை மின் நிலையங்கள், 495 மின் கடத்திகள், நூறு மின்மாற்றிகள் பாதிக்கப்பட்டுள்ளன. சீரமைப்புப் பணிகளுக்காக திருச்சியில் இருந்து 7,000 மின் கம்பங்கள் அனுப்பப்பட்டுள்ள நிலையில், மின்வாரியத்திடம் 60,000 மின் கம்பங்களும் தள வாடப்பொருட்களும் கையிருப்பில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சேதமதிப்பை பார்வையிடவும் சீரமைப்புப் பணி களை விரைவுபடுத்தவும் தமிழக எரிசக்தி துறைச் செயலாளர் முகமது நசிமுதீன், தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மானக் கழகத் தலைவர் விக்ரம் கபூர் உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்துள்ளனர்.

கஜா புயல் பாதிப்பால் நாகை, புதுக்கோட்டை, திருவாரூர், சிவ கங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையுடன் பலத்த புயல் காற்று வீசியதால் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்தன. குடிசை வீடுகள் பல காற்றில் பறந்த நிலையில் மின்கம்பங்களும் ஆங்காங்கே சாய்ந்து விழுந்துள்ளன. தொலைத்தொடர்பு முற்றிலும் துண் டிக்கப்பட்டுள்ளது. மின்சார விநியோக மும் தடைப்பட்டுள்ளது. படங்கள்: ஏஎஃப்பி, ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!