அயோத்தி: ராமர் கோயிலை ஆதரித்து பெருங்கூட்டம்

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள கோயில் நகரான அயோத்தியில் நேற்று பதற்றம் சூழ்ந்திருந்தது. விஸ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி), சிவசேனா உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த இரு நூறாயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் 'தர்ம சபை' என் னும் நிகழ்ச்சிக்காக அங்கு கூடி னர். அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டப் பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இதற்கு ஆதரவை தெரிவிக்கும் நோக்கில் 'தர்ம சபை' கூட்டத்துக்கு ஏற் பாடு செய்யப்பட்டது. 16ஆம் நூற்றாண்டில் கட்டப் பட்ட பாபர் மசூதி 1992ஆம் ஆண்டு இடிக்கப்பட்ட பின்னர் அங்கு இந்து அமைப்புகளின் பெருந்திரளான கூட்டம் நேற்று தான் நடைபெற்றது. கடந்த 2002 மார்ச் 15ஆம் தேதி விஎச்பி அமைப்பு சிலைதானம் என்ற பெயரில் பெரியதொரு கூட் டத்தைக் கூட்ட முயன்றது. அப் போது அயோத்தி அமைந்துள்ள பைசாபாத் மாவட்டம் முழுவதும் போலிஸ் படை சூழ்ந்து வெளி யாட்களை உள்ளே அனுமதிக்க மறுத்தது.

மும்பையின் தானே ரயில் நிலையத்தில் ஒன்றுகூடி முழக்கமிட்ட சிவசேனா கட்சியினர் 'தர்ம சபை' கூட்டத்தில் பங்கேற்பதற்காக அயோத்தி நோக்கி ரயில் பயணம் மேற்கொண்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!