கண்ணதாசன் விழாவில் விக்னேஸ்வரனுக்கு விருது

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஆண்டுதோறும் வழங்கி வரும் கவியரசு கண்ணதாசன் விருது இவ்வாண்டு தொலைக் காட்சி, மேடை நாடகங்கள், திரைப் படங்களின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் எனப் பல துறைகளில் தம்முடைய திறமையை வெளிப்படுத்தி வரும் திரு.எஸ்.எஸ்.விக்னேஸ்வரன் சுப் பிரமணியத்துக்கு வழங்கப்பட்டது. கடந்த 17ஆம் தேதி நடைபெற்ற கண்ணதாசன் விழாவில் இந்த விருது வழங்கப்பட்டது. வசந்தம் தொலைக்காட்சியின் பல தொடர் நாடகங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழு திய இவர் தொடர்களின் தலைப்புப் பாடல்களையும் எழுதி உள்ளார்.

சமீபத்தில் வசந்தம் தொலைக் காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘அடுக்கு வீட்டு அண்ணாசாமி’ என்ற நாடகத்திற்கு தொலைக்காட் சிக்கு ஏற்ற வகையில் திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கியும் உள் ளார் இவர். சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் நான்கு முக்கிய விழாக்களில் ஒன்றான கவியரசு கண்ணதாசன் விழா அருள்மிகு தெண்டாயுதபாணி கோயில் மண்டபத்தில் நடைபெற்றது. அதில் சிங்கப்பூர் இந்திய வர்த்தக தொழிற்சபையின் தலை வரும் மாடர்ன் மாண்டிசோரி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான டாக்டர் த.சந்துரு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் கவியரசு கண்ணதாசன் விருதுபெற்ற திரு. எஸ்.எஸ்.விக்னேஸ்வரன் சுப்பிரமணியம் ஏற்புரை வழங்கினார்.