ஈரானில் கடும் நிலநடுக்கம்; 700 பேருக்கு மேல் காயம்

துபாய்: ஈரானின் மேற்குப் பகுதியில் நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 700க்கும் மேற் பட்டோர் காயமடைந்தனர். பெரும்பாலோர் சிறிய காயங் களால் அவதியுறுகின்றனர் என்று மாநிலத் தொலைக்காட்சி செய்தி யில் குறிப்பிட்டது. ஞாயிறு இரவு ஏற்பட்ட 6.3 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கம் குறைந்தது ஏழு மாநிலங்களில் உணரப்பட்டது. கெர்மான்ஷாவில் மட்டும் நிலநடுக்கம் வலுவாக இருந்தது. இதனால் அந்த மாநிலத்தில் மட்டும் 600க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

பத்து ஆண்டுகளுக்கு மேல் இல்லாத சக்திவாய்ந்த நிலநடுக்கம் தற்போது தாக்கியுள்ளது என்று ஈரானின் அதிகாரிகள் தெரி வித்தனர். இந்த நிலையில் ஈரானிய அதிபர் ஹசான் ருஹானி, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ஆன அனைத்து உதவிகளையும் செய்ய உத்தரவிட்டுள்ளார். ஈரானின் செம்பிறை சங்கத்தின் தலைவர் மஹ்முட் மொஹமாடி நசாப், உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என்று கூறியுள்ளார். கெர்மான்ஷாவில் உள்ள சர்போல்-இ-ஸாஹப் நகரில் சேத மடைந்த வீடுகள் தொலைக் காட்சியில் காட்டப்பட்டன. இதனால் ஏராளமானோர் வீடுகளை இழந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஈரானில் நிகழ்ந்த நிலநடுக்கம் துபாயிலும் ஈராக் தலைநகர் பாக்தாத்திலும் உணரப்பட்டது. ஆனால் சேதங்கள் பற்றி உடன டியாகத் தகவல் இல்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!