இயற்கை எழில் கொஞ்சும் பெலித்துங் தீவு

இர்ஷாத் முஹம்மது

இயற்கை அழகை ரசித்து விடு முறையைக் கழிக்க தென்கிழக்கு ஆசியாவில் ஏராளமான இடங்கள் உள்ளன. அந்த இடங்களுக்கு உலகின் பல பகுதிகளிலிருந்தும் சுற்றுப்பயணிகள் வந்து செல்வது அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தோனீசியாவின் பாலித் தீவு, தாய்லாந்தின் புக்கெட், கிராபி தீவுகள் ஆகியவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனை வரையும் ஈர்க்கும் இடங்களாகத் திகழ்கின்றன. அண்மையில் சவூதி அரேபிய மன்னர் சல்மான் பெரும் புடைசூழ பாலித் தீவில் விடுமுறையைக் களித்தது அனை வருக்கும் வியப்பை அளித்தது. அந்த வகையில், மக்களால் இன்னும் அதிகம் அறியப்படாத இயற்கை தந்த பொக்கிஷமாக இந்தோனீசியாவின் பெலித்துங் தீவு விளங்குகிறது.

சிங்கப்பூரிலிருந்து ‘கருடா ஏர்லைன்ஸ்’ விமானம் மூலம் 50 நிமிடங்களில் ஜாவா கடலின் மத்தியில் உள்ள பெலித்துங் தீவைச் சென்றடையலாம். சிங்கப் பூரில் இருந்து பாலித் தீவுக்குச் செல்வதைவிட பாதிக்கும் குறை வான தொலைவில் இந்தத் தீவு அமைந்துள்ளது. சுற்றுப்பயணிகள் அதிக எண் ணிக்கையில் இன்னும் இந்தத் தீவிற்குச் செல்வதில்லை. இயற் கையின் அழகை நேரில் கண்டு மகிழ்ந்து அதிசயிக்கும் வாய்ப்பை இந்தத் தீவு வழங்குகிறது. தூய்மையான காற்று, சுத்தமான சாலைகள், வெண்மையான கடற் கரை மணல், கண்ணாடி போன்ற கடல் நீர் என இயற்கைக்கு எந்தவித பங்கமும் விளைவிக்கா மல் வருகையாளர்களுக்கு விருந் தளிக்கிறது பெலித்துங்.

சிங்கப்பூரை மையமாகக் கொண்ட ‘நாஸா ஹோல்டிங்ஸ்’ நிறுவனம் அந்தத் தீவில் பெரிய அளவில் முதலீடு செய்து உலகின் பல பகுதிகளிலிருந்தும் சுற்றுப் பயணிகளை அந்தத் தீவை நோக்கி ஈர்க்க கடப்பாடு கொண் டுள்ளது. அதற்கான முயற்சியாக அந் நிறுவனத்தின் பயண முகவையான ‘எம்டிஎன் கெட்அவேஸ்’ நிறுவனம் மிகக் குறைவான கட்டணத்தில் பெலித்துங்கிற்கு சுற்றுப்பயணி களை அழைத்துச் செல்கிறது. நான்கு நாள் மூன்று இரவு பயணத்திற்கு விமானம், தங்கு மிடம், மூன்று வேளை உணவு, சுற்றுப்பயண கட்டணங்கள் அனைத்தையும் உள்ளடக்கி $499 மட்டுமே வசூலிக்கிறது. மூன்று நாள் இரண்டு இரவு பயணத்திற்கு அனைத்து செலவு களும் உட்பட $399 மட்டுமே. வெறும் விமான டிக்கெட், தங்குமிட செலவு, காலை உணவு மட்டும் போதுமானது எனும் பட்சத்தில் $299 கட்டணம் செலுத்தினால் போதும்.

பெலித்துங் தீவைச் சுற்றியுள்ள சிறிய தீவுகளுக்குச் சென்று வருவது இந்தச் சுற்றுலாவின் சிறப்பம்சங்களில் ஒன்று. படகு மூலம் சுமார் அரை மணி நேரம் பயணம் செய்து பல சிறிய தீவுகளின் அழகை ரசிப்பதுடன் என்றும் மறக்க முடியாத நினைவு களை அளிக்கும்விதமாக அழகிய புகைப்படங்களையும் எடுத்து வரலாம்.

‘ஸ்னார்கலிங்’ போன்ற நீர் விளையாட்டுகளும் இந்தத் தீவின் சிறப்பம்சங்களில் ஒன்று. ‘டின்’ உலோகப் பொருளை பூமியிலிருந்து எடுத்த பகுதிகளில் காணப்படும் அழகிய நீல நிற, சிறு நீர்த்தேக்கங்கள் கண்ணுக்குக் குளிர்ச்சியளிக்கும். இந்த அனு பவத்தை நேரில் சென்று கண்டால் மட்டுமே உணரமுடியும்.