அனைத்துலக மேடையில் பிரம்மாஸ்திரா

எஸ்.வெங்கடேஷ்வரன்

உள்ளூர் இசைக் குழுவான பிரம்மாஸ்திரா, சிங்கப்பூர் இசைக் கலைஞர்களைப் பிரதிநிதித்து தாய்லாந்து தலைநகர் பேங்காக் கில் இசை நிகழ்ச்சிகளையும் இசையை ஒட்டிய ஆய்வுக்கட்டு ரைகளையும் வழங்கவுள்ளது. ‘பெட்சாபூரி ராஜபாத்’ பல் கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் 8வது முறையாக அனைத்துலக இசை, நடன விழாவும் 5ஆம் முறையாக அனைத்துலக மாநாடும் அடுத்த மாதம் 2ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை அப்பல்கலைக் கழகத்தில் நடைபெறவுள்ளது.

திரு இசுரு விஜெசோமா (ஸ்லைடு கித்தார்), திரு லலித் குமார் கணேஷ் (தபேலா), திரு முரளிதரன் நாயுடு (கஹான்), திரு கில்டன் சூ (பிப்பா), திரு நிரஞ்சன் பாண்டியன் (பன்சூரி / வேணு) ஆகியோர் பிரம்மாஸ்திரா குழுவில் இடம்பெறுவர். பாரம்பரிய முறையிலும் நவீன முறையிலும் இவர்களின் இசைப் படைப்பு அமையும். பிரம்மாஸ்திரா இசைக்குழு 2015ஆம் ஆண்டில் தொடங்கியது. சென்ற ஆண்டு ஜூன் மாதத்தில் இக்குழு தமது முதல் அனைத்துலக படைப்பை மேற்கொண்டிருந்தது. பேங்காக் நகரில் அமைந்திருக்கும் ஸ்ரீனாகரின்விரோட் பல்கலைக்கழ கத்தில் 7ஆம் முறையாக நடந்த அனைத்துலக கலை, கலாசார விழா அது.

இந்நிகழ்ச்சியின் மூலம் இரண் டாவது முறையாக அனைத்துலக அளவில் சிங்கப்பூருக்கு பெருமை சேர்க்க விழைகிறது பிரம்மாஸ்திரா. அனைத்துலக அளவில் கல்வி, கலை, கலாசாரம், அனைத்துலக உறவுகள் ஆகியவை வலுப்படும் என்றும் கல்வியையும் தகவல் களையும் பகிரும் தளமாக இந் நிகழ்ச்சி அமையும் என்றும் ஏற் பாட்டாளர்கள் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சி தேசிய கலைகள் மன்றத்தின் ஆதரவில் நடைபெறும்.

(இடமிருந்து) முரளிதரன் நாயுடு, கில்டன் சூ, நிரஞ்சன் பாண்டியன், இசுரு விஜெசோமா, லலித் குமார் கணேஷ். படங்கள்: பிரம்மாஸ்திரா