விஷ்ணு விஷால்: அமலாவுடன் காதல் இல்லை

தனக்கும் அமலாபாலுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளதாக ஊடகங்களில் வெளியான தகவலைத் திட்டவட்டமாக மறுத்துள்ளார் நடிகர் விஷ்ணு விஷால். இத்தகைய வதந்திகளைப் பரப்ப வேண்டாம் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். விஷ்ணு விஷாலும் அமலாவும் அண்மையில் வெளியான 'ராட்சசன்' படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர். படப்பிடிப்பின்போது இருவரும் நெருங்கிப் பழகியதாக ஒருசிலர் வதந்தி கிளப்பி விட்டனர். இதையடுத்து இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் திருமணம் செய்து கொள்வதாகத் தகவல் பரவியது. இதனால் விஷ்ணு விஷால் கடும் அதிருப்தி அடைந்துள்ளார்.

அவர் அண்மையில்தான் தனது மனை வியை விவாகரத்து செய்தார் என்பது கவனிக்கத்தக்கது. இந்நிலையில் தனக்கும் அமலாபாலுக்கும் திருமணம் நடப்பதாக வெளியான செய்தி முற்றிலும் அபத்தமானது என்று அவர் தெரிவித்துள்ளார். "தயவு செய்து பொறுப்புடன் செயல் படுங்கள். நாங்களும் மனிதர்கள்தான். எங்களுக்கும் குடும்பம், வாழ்க்கை என எல்லாம் உண்டு. எழுத வேண்டும் என்பதற்காக ஏதாவது எழுதாதீர்கள்," என்று தமது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் விஷ்ணு விஷால். இது குறித்து தனக்கு நெருக்கமான திரைத்துறை செய்தியாளர்களையும் தொடர்பு கொண்டு பேசினாராம்.

'ராட்சசன்' படப்பிடிப்பின் போது விஷ்ணு விஷால், அமலா பால்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!