கஜா புயலின் சீற்றம், வாழ்வாதாரமே நாசம்

இர்ஷாத் முகம்மது, எஸ்.வெங்கடேஷ்வரன்

புயல் போன்ற இயற்கைப் பேரிடர்கள் பெரும் உயிருடற் சேதத்தை ஏற்படுத்துவது வழமை.
ஆனால் இதுவரை வாழ்ந்துவந்த வாழ்க்கையையே உருமாற்றி வாழ்வாதாரத்தையே சீர்குலைத்து, இனி எதை நம்பி வாழ்வது, என்ன செய்து பிழைப்பது என்று பல பகுதிகளில் மக்கள் பலரும் செய்வதறியாது தவிக்கும் ஒரு நிலையைக் கஜா புயல் தமிழ்நாட்டில் ஏற்படுத்திவிட்டது. புயல் தமிழ்நாட்டில்தான் என்றாலும் சிங்கப்பூரிலும் அதன் தாக்கம் ஆழமாகத் தெரிகிறது...

தமிழகத்தின் பன்னிரண்டு மாவட்டங்களைக் கஜா புயல் இம்மாதம் 16ஆம் தேதி சீர்குலையச் செய்து விட்டதையடுத்துச் சிங்கப்பூரில் அதன் பாதிப்புப் பல வகையில் பிரதிபலித்துள்ளது.
புயலால் பாதிக்கப்பட்டு மின்சாரம் துண்டிக்கப் பட்டுத் தொலைபேசி இணைப்பும் இல்லாமல் தங்களின் உறவினர்களின் நிலை என்ன என்று தெரியாத நிலையில் உடனே விமானம் மூலம் கடந்த ஞாயிற்றுக் கிழமை திரு முருகேசன் பன்னீர்செல்வம் தமிழகம் புறப்பட்டார்.
"உறவினர்களைத் தொடர்புகொள்ளவே முடிய வில்லை. அப்பகுதியில் உள்ள மற்றவர்களுக்கும் தொடர்பு கிடைக்கவில்லை. மிக்க துயரத்தில் நான் உடனே கிளம்பவேண்டியதாயிற்று," என்றார் கட்டு மானத் துறையில் பணியாற்றும் 32 வயது இந்திய நாட்டு ஊழியர் முருகேசன்.
பட்டுக்கோட்டையை அடுத்துள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த அவர், "என் அம்மா, அப்பா, மனைவி, பிள்ளைகள் எப்படி இருக்கிறார்கள் என்பது தெரிய வில்லை," எனக் கண்கலங்கியபடி தெரிவித்தார்.
தோப்புகள் போய்விட்டன
உயிர்கள் பலியாயின; பலர் காயமடைந்தனர்; வீடுகள் சேதமடைந்தன; விவசாய நிலங்கள் அழிந் தன; மரங்கள் சாய்ந்தன; மின்சாரக் கம்பங்கள் வீழ்ந் தன; போக்குவரத்துத் துண்டிக்கப்பட்டது. புயலின் சீற்றத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் எண்ணிலடங்கா. 2004ஆம் ஆண்டு சுனாமி பேரிடருக்குப் பின்னர் தமிழகத்தைத் தாக்கிய மோசமான இயற்கை சீற்ற மாக கஜா புயலைப் பலர் வர்ணிக்கிறார்கள்.
பட்டுக்கோட்டை அருகில் அணைக்காடு கிராமத் தைச் சேர்ந்த 25 வயது பொறியியலாளர் வி அருள் ஓஸ்வின், புயலால் அங்கு பெருமளவில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதைப் பற்றி கூறினார்.
சிங்கப்பூரரான இவரின் உறவினர்கள் பெரும் பாலானோர் பட்டுக்கோட்டைப் பகுதியில் வசித்துவரு கிறார்கள். தமது குடும்பத்தாருக்கும் உறவினர்களுக் கும் தென்னந்தோப்பு மிகுதியாக இருந்ததாகவும் கஜா புயல் அவற்றில் 60%க்கும் அதிக தோப்புகளை அழிந்துவிட்டதாகவும் அருள் ஓஸ்வின் கூறினார்.
"ஒரு தென்னைமரம் வளர்ப்பது ஒரு குழந்தையை வளர்ப்பதுபோல என்று என் பெற்றோர் என்னிடம் பலமுறை கூறியது நினைவுக்கு வருகிறது. நாள் தோறும் நீர்ப்பாய்ச்சி உரமிட்டுப் பிள்ளையைப் போல் வளர்த்து வந்த மரங்கள் எல்லாம் இப்போது அடியோடு போய்விட்டன. ஒரு தென்னைமரம் வளர்ந்து காய்ப் பதற்கு ஐந்தாண்டுகளாவது ஆகும்," என்று கவலை யுடன் அவர் தெரிவித்தார்.
உணவு உதவி
அந்தக் கிராமம் மீண்டு வருவதற்கு இன்னும் 20 ஆண்டுகள் ஆகும் என்று தனது உறவினரான 23 வயது குலோத்துங்கன் ராஜசேகர் தம்மிடம் கூறியதை யும் திரு அருள் நினைவுகூர்ந்தார்.
அண்மையில் பட்டக்கல்வியை முடித்து வேலைக் குச் செல்லும் திரு குலோத்துங்கனின் குடும்பத் தாருக்குத் தென்னந்தோப்புதான் வாழ்வாதாரம். 150 மரங்கள் இருந்த ஒரு தோப்பில் இப்போது 10 மரங் கள் மட்டுமே எஞ்சி நிற்கின்றன.
பல கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கும் இதுபோன்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
குடிக்க தண்ணீர் இல்லாமல், உண்ண உணவு இல்லாமல், உடுத்த உடை இல்லாமல் தவிக்கும் மக்கள் ஏராளம். இவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட சிங்கப்பூரில் பலர் முன்வந்துள்ளனர்.
தங்களால் இயன்றவகையில் பலர் சுயமாக உதவி நல்கி வருகின்றனர். நிதித் திரட்டுப் பணியிலும் பலர் ஈடுபட்டுள்ளனர்.
சிங்கைத் தமிழ்ச் சங்கத்தைச் சேர்ந்த ஐவர் கொண்ட குழு பாதிப்படைந்த மக்களுக்குத் தேவை யான அத்தியாவசிய பொருட்களை வாங்கி அனுப்பு வதற்கான பணிகளை ஒருங்கிணைத்து வருகிறது.
முதல் கட்டமாக 1,000 பேருக்கு ஒரு வேளை உணவு விநியோகித்துள்ளதாகக் குழு உறுப்பினர் திரு துரை மருதீஸ்வரன் தெரிவித்தார்.
கனமழை காரணமாக திருவாரூரில் உள்ள ஒரு கோயிலில் சமைத்துத் தமது நண்பர்களின் மூலம் வேதாரண்யப் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கியதாக அவர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரிலிருந்து கைகொடுத்து உதவும் கரங்கள்


சிங்கப்பூரில் அன்றாடம் செய்தித்தாட் களை விநியோகிக்கும் பணியில் ஈடுபடும் தமிழர்கள் அதிகம்.
கஜா புயல் கடுமையாக பாதித்துவிட்ட பகுதிகளில் ஒன்றான பட்டுக்கோட்டையைச் சேர்ந்த கிட்டத்தட்ட 300க்கும் அதிக மானவர்கள் சிங்கப்பூரில் இப்போது செய்தித்தாள் விநியோக வேலை பார்க் கிறார்கள் என்று 'தம்பி மேகசின் ஸ்டோர்' நிறுவனத் தலைவர் திரு செந்தில் முருகன் தெரிவித்தார்.
"செய்தித்தாள் விநியோகிப்பாளர்கள் ஒருபுறம் இருக்க, பட்டுக்கோட்டையில் இருந்து பல ஊழியர்கள் சிங்கப்பூருக்கு வேலை வாய்ப்புகளைத் தேடி வருகிறார்கள்.
"அவர்களின் குடும்ப உறவுகள் அங்கு வாழ்கிறார்கள். இங்கு எப்படி நிம்மதி இருக்கும்?"
"என் தாத்தா வேலைசெய்த காலத் திலிருந்து மூன்று தலைமுறையாக நாங் கள் வேலைபார்க்க பட்டுக்கோட்டையில் இருந்து சிங்கப்பூர் வந்துள்ளோம்," என்று குரல் நடுங்கக் கூறினார் திரு செந்தில்.
இம்முயற்சியை வழிநடத்துவோரில் ஒருவர் 'சன் நியூஸ்' நிறுவனத்தின் தலைவர் திரு எஸ்பி. ஜெயகுமார், 57.
"என் மூதாதையர்களும் என் நிறுவனத் தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் சிலரும் பட்டுகோட்டையைச் சேர்ந்தவர்கள். பணி யிலிருந்து ஓய்வுபெற்ற பலரும் திரும்பி ஊருக்குச் சென்றுவிடுகிறார்கள்.
அங்குள்ள தென்னை மரங்களிலிருந்து வரும் வருமானத்தை நம்பி பலரும் வாழ்க் கிறார்கள்," என்கிறார் செய்தித்தாள் விநி யோகத் துறையில் கிட்டத்தட்ட 33 ஆண்டு அனுபவம் பெற்ற திரு ஜெயகுமார்.
"தென்னை மரங்கள் முழுமையாக வளர்வதற்கு ஏறத்தாழ 10 ஆண்டுகள் ஆகும்.
"அம்மரங்கள் காய்த்து லாபத்தை ஈட்ட எப்படியும் 12 முதல் 15 ஆண்டுகள் வரை பிடிக்கும். இப்போது பட்டுக்கோட்டை மாவட்டதைச் சுற்றியுள்ள சுமார் 36 ஊர்க் களில் 90% மரங்கள் வேரோடு அழிந்து விட்டன," என்றும் திரு ஜெயகுமார் கவலையுடன் தெரிவித்தார்.
உணவு, ஜெனரேட்டர், படுக்கை விரிப்பு போன்ற அத்தியாவசியத் தேவை களைப் பூர்த்திசெய்ய எஸ்பிஎச் திரட்டும் நிதி பயன்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இதுபோன்று பட்டுகோட்டை, புதுக் கோட்டை வட்டாரங்களைப் பூர்வீகமாகக் கொண்ட பல தமிழர்கள், சிங்கப்பூரில் வசிக்கிறார்கள்.
வேலை அனுமதிச் சீட்டிலும் பலர் வேலைபார்த்து வருகிறார்கள்.
அவர்களில் பலர் தங்கள் கிராம வாசிகளுக்கு அன்னதானம் வழங்குவது, அத்தியாவசியப் பொருட்கள் வாங்கி அனுப்புவது போன்ற தங்களால் முடிந்த உதவியைத் தனிப்பட்ட முறையில் செய்து வருகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!