தென்னாப்பிரிக்காவைப் பந்தாடிய இந்திய அணி

புவனேஸ்வர்: 14வது உலகக் கிண்ண ஆண்கள் ஹாக்கி போட்டி இந்தியாவின் ஒடிசா மாநிலத் தலைநகர் புவனேஸ் வரத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் 'சி' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியாவும் தென் னாப்பிரிக்காவும் மோதின. ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இந்திய வீரர்கள் கோல் போடும் வேட்கையுடன் ஆடினர். ஆட்டத்தின் 10வது நிமிடத் தில் மந்தீப் சிங் முதல் கோல் அடித்து அணியின் கோல் மழையைத் தொடங்கிவைத்தார். அவரைத் தொடர்ந்து, அக் ஷ்தீப் சிங் 12வது நிமிடத்தில் ஒரு கோல் போட்டார்.

ஆட்டத்தின் முதல் பாதியில் இந்தியா 2=0 எனும் கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. ஆட்டத்தின் பிற்பாதியிலும் இந்திய வீரர்கள் தங்கள் அதிரடி ஆட்டத்தைத் தொடர்ந்தனர். இந்திய வீரர் சிம்ரன் ஜித் சிங் 43 மற்றும் 46=வது நிமிடங்களில் கோல்கள் போட்டார். லலித் உபாத்யாயா 45வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். தென்னாப் பிரிக்க அணியால் கடைசி வரை கோல் போட முடியாமல் போனது. இறுதியில், இந்திய அணி தென்னாப்பிரிக்காவை 5-0 எனும் கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

பந்தை வலை நோக்கி அனுப்பும் இந்திய வீரர்கள். படம்: இபிஏ

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!