இதய செயலிழப்புக்கான அறிகுறிகளைக் கண்டுபிடிக்க புதிய கையடக்கக் கருவி

மூச்சுத் திணறலால் அவதியுறு வோர், தங்கள் பிரச்சினைக்கு இதயக் கோளாறா அல்லது வேறு விதமான உடல் உபாதை காரணமா என்பதைக் கண்டுபிடிக்கும் புதிய கருவி ஒன்று வெளிவரக்கூடும். இந்தக் கருவி வீட்டிலேயே பயன்படுத்தக்கூடியதாக உள்ளது. நுரையீரலில் நீர் சேர்ந்துள் ளதா என்பதை இந்தக் கருவி கண்டுபிடிக்கும். நுரையீரலில் நீர் சேர்வது, இதய செயலிழப்புக்கான ஆரம்ப அறிகுறிகளில் ஒன்றாக உள்ளது. நன்யாங் தொழில்நுட்பப் பல் கலைக்கழகத்தையும் டான் டோக் செங் மருத்துவமனையையும் சேர்ந்த ஆய்வாளர்களால் இந்தக் கருவி உருவாக்கப்பட்டுள்ளது.

கருவியின் முன்னோட்ட வடிவம் நேற்று காட்சிக்கு வைக்கப்பட்டது. நோயாளிகள், உணர்கருவி ஒன்றை மட்டும் தங்களது முதுகின் மீது வைத்தாலே போதும். அவர்களது நுரையீரலிலிருந்து வெளிவரும் சத்தத்தை உள் வாங்கிக் கொண்டு செயலி ஒன்றின் வழியாக, ‘கிளவுட்’ கட்டமைப்பு ஒன்றுக்கு உணர் கருவி அனுப்பும். இந்தச் சத்தத் தைக்கொண்டு, நோயாளியின் நுரையீரலுக்குள் திரவம் சேர்ந் துள்ளதா இல்லையா என்பதை இந்தக் கட்டமைப்பு உறுதி செய் யும்.

நோயாளி திருவாட்டி டான் ஹுவி கேங்கின் மீது இந்தப் புதிய கருவி சோதனை செய்யப்படுகிறது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்