எதிரணியினரை ஓரங்கட்டிய ஆர்சனல், செல்சி

நேற்று அதிகாலை நடைபெற்ற ஐரோப்பிய லீக் காற்பந்துப் போட்டி களில் லண்டன் அணிகளான ஆர்சனல், செல்சி இரண்டும் அதிக கோல் எண்ணிக்கையில் எதிர்த்து விளையாடிய அணி களை ஓரங்கட்டின. உனய் எமிரே நிர்வகித்து வரும் ஆர் சனல் குழு உக்ரேனிய அணி யான வோர்ஸ்க்லா போல்டாவா குழுவை 3=0 என்ற கோல் எண் ணிக்கையில் துவம்சம் செய்தது. பாதுகாப்பு காரணங்களுக் காக கியவ் நகருக்கு மாற்றப்பட்ட இந்தப் போட்டியின் முடிவால் 'இ' பிரிவில் ஆர்சனல் முதல் நிலையில உள்ளது. ஆர்சனலின் முதல் கோலை ஸ்மித் ரோவ் என்ற இளையர் ஆட்டத்தின் 10ஆம் நிமிடத்தில் போட்டார். பின்னர் ஆட்டத்தின் 27ஆம் நிமிடத்தில் ஆர்சன லுக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை குறி தவறாமல் கோல் வலைக்குள் செலுத்தினார்

ஆர்சனலின் ஏரோன் ரேம்சி. பின்னர், முற்பாதி ஆட்டம் முடிய நான்கே நிமிடங்கள் இருக்கும் நிலையில் மற்றோர் இளையரான ஜோ வில்லோக் தமது அணியின் மூன்றாவது கோலை போட்டு வோர்ஸ்க்லா போல்டாவா குழுவை மீள முடியாத நிலைக்குத் தள்ளினார். இனி அடுத்த சுற்றில் சாம்பியன்ஸ் லீக்கில் தகுதி பெறாத அணிகளை ஆர்சனல் சந்திக்காமல் நேராக அடுத்த சுற்றுக்கு முன்னேறலாம். இந்த ஆட்டத்தில் போர்ன்மத் குழுவை எதிர்கொண்ட குழுவின் பத்து வீரர்களுக்குப் பதிலாக இளையர்களைக் களமிறக்கினார் உனய் எமிரே. அவர்களும் சோடை போகவில்லை.

மற்றோர் ஆட்டத்தில் மொரி சியோ சாரியின் செல்சி குழு பிஓஏகே சலோனிகா குழுவை 4-0 என்ற கோல் எண்ணிக்கையில் வீழ்த்தியது. இதில் முன்னாள் ஆர்சனல் வீரரும் தற்பொழுது செல்சி குழுவிற்காக விளையாடுபவரு மான ஒலிவியே ஜிரூ இரண்டு கோல்கள் போட்டு அணிக்கு தமது முக்கியத்துவத்தை நினைவுப டுத்தினார்.

எதிரணி கோல்காப்பாளரான அலெக்சாண்டிரோஸ் பஸ்கலாக்கிசும் மோதும் காட்சி. இந்த ஆட்டத்தில் ஜிரூ இரண்டு கோல்கள் போட்டு தமது அணியின் வெற்றிக்கு வித்திட்டார். ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!