இரட்டை வரிவிதிப்பைத் தவிர்க்க அடுத்த ஆண்டில் சிங்கப்பூர்-அர்ஜெண்டினா பேச்சுவார்த்தை

சிங்கப்பூரும் அர்ஜெண்டினாவும் இரட்டை வரி விதிப்பைத் தவிர்த்துக் கொள்வதற்கான ஓர் உடன்பாடு பற்றி அடுத்த ஆண்டில் பேச்சுவார்த்தை யைத் தொடங்கும். அதோடு, ஒரு முதலீட்டு உடன்பாடு தொடர்பான பேச்சுவார்த்தைகளை அடுத்த ஆண்டு முதல்பாதியில் நடத்தி முடிக்க அவை திட்டமிட்டு உள்ளன. பிரதமர் லீ சியன் லூங்கும் அர்ஜெண்டினா அதிபர் மேக்ரியும் அந்த இரண்டு உடன்பாடுகளுக்கான கால அளவைப் பற்றி வியாழக்கிழமை அறிவித்தனர்.

இரு நாடுகளுக்கும் இடையில் பொருளியல் உறவுகளை ஊக்குவிப்ப தற்கான தங்கள் கடப்பாட்டை இரு தலைவர்களும் மறுஉறுதிப்படுத்தினர். சிங்கப்பூருக்கும் தென்அமெரிக்க சுங்கத் துறைகள் ஒன்றியத்திற்கும் இடையில் தாராள வர்த்தக உடன்பாடு தொடர்பில் முதல் சுற்றுப் பேச்சுவார்த் தையைத் தொடங்கவும் இரு தலைவர் களும் இணங்கினர். அந்த ஒன்றியத்தில் அர்ஜெண்டினா வுடன் பிரேசில், உருகுவே, பராகுவே ஆகிய நாடுகளும் அங்கம் வகிக்கின் றன. பிரதமர் லீ, அர்ஜெண்டினாவிற்கு நான்கு நாள் பயணம் மேற்கொண்டிருக் கிறார். அங்கு நடக்கும் ஜி-20 உச்ச மாநாட்டில் அவர் கலந்துகொள்கிறார்.

அர்ஜெண்டினா சென்றுள்ள பிரதமர் லீ சியன் லூங் (இடது), அந்த நாட்டு அதிபர் மேக்ரியை அவருடைய அதிகாரபூர்வ அலுவலகத்தில் சந்தித்தார். படம்: தொடர்பு தகவல் அமைச்சு

இப்பகுதியில் மேலும் செய்திகள்