மனநலத்தை மேம்படுத்தும் கலைப் பயிலரங்குகள்

மனநலப் பிரச்சினைகளுக்கு உதவி நாடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், சிங்கப்பூர் மனநலச் சங்கம் அப்படிப்பட்டவர் களுக்கு சிகிச்சை அளிக்கும் திட் டத்தைத் தொடங்கி உள்ளது. ‘தி கிரியேட்டிவ் மைண்ட்செட் ஹப்’ எனும் அந்தப் படைப்பாக்க மனநிலை மையம் நேற்று ‘அவர் தெம்பனிஸ் ஹப்’பில் திறக்கப்பட் டது. அங்கு மனநலத்தை மேம்படுத் தும் வகையில் கதை சொல்லுதல், ஓவியத்துக்கு வண்ணம் தீட்டுதல் போன்றவற்றை வலியுறுத்தும் பயி லரங்குகள் நடத்தப்படும். தங்கள் வாழ்வின் ஒரு காலக் கட்டத்தில் உலகில் நான்கில் ஒரு வருக்கு மனநலம் அல்லது நரம் பியல் கோளாறுகள் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு கடந்த அக்டோபர் மாதத்தில் அறிக்கை வெளியிட்டது. அதேவேளையில், மனநலத் துக்குக் கலைகள் நல்ல தாக் கத்தை ஏற்படுத்தலாம் என்றும் உலகளாவிய ஆய்வுகள் கூறுகின் றன.

மனநலப் பாதிப்பு உள்ள ஒரு வரிடம் காட்சிக்கலை மூலம் மன அழுத்தத்தையும் பதற்றத்தையும் குறைக்கலாம் என்றும் சான்றுகள் கூறுகின்றன. ‘தி கிரியேட்டிவ் மைண்ட்செட் ஹப்’ கடந்த ஜூன் மாதத்திலிருந்து செயல்பட்டு வருகிறது. மக்கள் கழகம், தெம்பனிஸ் குழுத் தொகு தியின் சமூக கலைகள் மற்றும் கலாசார மன்றங்கள் ஆகியவற் றுடன் இணைந்து இந்த மையம் செயல்படுகிறது. இலவசம் முதல் $80 வரை கட் டணம் இருக்கும் அதன் சேவை களுக்கு அனைவரும் பதிந்து கொள்ளலாம்.

‘அவர் தெம்பனிஸ் ஹப்’பில் நேற்று மனநலச் சுகாதாரச் சங்கத்தின் படைப்பாக்க மனநிலை மையத்தைத் திறந்து வைத்த அதிபர் ஹலிமா யாக்கோப் (நடுவில்) அங்கு கலை வளையங்களை உருவாக்கும் சிறுவர்களின் படைப்பாற்றலைப் பார்வையிடுகிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்