இந்தியா-பெல்ஜியம் மோதல்

புவனேஷ்வர்: உலகக் கிண்ண ஹாக்கிப் போட்டி இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் தலைநகர் புவனேஷ் வரத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் விளையாடும் மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி 'சி' பிரிவில் இடம் பெற்றுள்ளது. பெல்ஜியம், கனடா, தென்னாப் பிரிக்கா ஆகிய அணிகள் அந்தப் பிரிவில் உள்ளன. இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை 5=0 எனும் கோல் கணக்கில் பந்தாடியது. இரண்டாவது ஆட்டத்தில் பெல் ஜியம் அணியை இன்று அது சந்திக்கிறது. இந்திய அணி பெல்ஜியத்தை வீழ்த்தி இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்யும் முனைப்புடன் இருக் கிறது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகச் சிறப்பாக விளையாடியதால் மிகுந்த நம்பிக்கையுடன் அக்குழு இருக்கிறது. பெல்ஜியம் அணி அதன் தொடக்க ஆட்டத்தில் 2=1 என்ற கோல் கணக்கில் கனடாவை வீழ்த்தி இருந்தது.

இந்தியா-பெல்ஜியம் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சிங்கப்பூர் நேரப்படி இன்றிரவு 9.30 மணிக்குத் தொடங்குகிறது. மற்றோர் ஆட்டத்தில் இதே பிரிவில் உள்ள தென்னாப்பிரிக்கா=கனடா அணிகள் மோதுகின்றன. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு வெற்றியாளரான ஆஸ்திரேலியா 2=1 எனும் கோல் கணக்கில் அயர்லாந்தை வீழ்த்தியது. ஆஸ்திரேலியாவின் அதிரடி ஆட்டத்தைக் கண்டு பதற்றம் அடையாமல் விளையாடியது அயர் லாந்து. ஆனால் அனுபவம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணி வெற்றியை நழுவவிடவில்லை. இங்கிலாந்து-சீனா அணிகள் மோதிய மற்றோர் ஆட்டம் 2-2 எனும் கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. இந்த ஆட்டத்தைக் கைப்பற்றும் கனவுடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு இது பெரும் ஏமாற்றத்தைத் தந்துள்ளது. உலகக் கிண்ணப் போட்டியின் அரையிறுதிக்குத் தகுதி பெறுவதில் அதற்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஹாலந்து=மலேசியா, ஜெர்மனி- பாகிஸ்தான் இடையிலான ஆட்டங் களும் இன்று நடைபெறுகின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!