லா லீகா காற்பந்து: முன்னேற்றப் பாதையில் ரியால் மட்ரிட்

பெர்னபாவ்: ஸ்பானிய லா லீகா காற்பந்துப் போட்டியில் வெலன் சியாவை வீழ்த்திய ரியால் மட்ரிட் முதலிடத்திலுள்ள செவ் வியாவுடனனான புள்ளிகள் இடைவெளியை மூன்றாகக் குறைத்துள்ளது. தொடக்க நேரத்தில் வெலன் சியா குழுவின் வாஸ் போட்ட சொந்த கோலைத் தவிர ஆட்டத்தின் கடைசி நேரம் வரை எந்த கோலும் விழ வில்லை. 83வது நிமிடத்தில் லுகாஸ் வாஸ்குவேஸ் போட்ட ஒரு கோலால் 2 கோல்கள் வித்தி யாசத்தில் வெற்றி பெற்றது ரியால் மட்ரிட்,

இதற்கிடையே, மட்ரிட்டின் கேரத் பேல் வலையை நோக்கி உதைத்த பந்தை எதிரணியின் கோல்காப்பாளர் நேட்டோ தடுத்துவிட்டார். இதுதவிர கரிம் பென்சிமா உதைத்த பந்து கோல் வலைக்கு வெளியே சென்றதால், மட்ரிட் டின் கணக்கில் கோல் எதுவும் சேரவில்லை. இந்த வெற்றியால் 23 புள்ளி களுடன் மட்ரிட் ஐந்தாம் இடத்தைப் பிடித்தது. கடந்த அக்டோபர் மாதம் மட்ரிட்டின் நிர்வாகியாக பதவி யேற்ற சென்டியாகோ சோலா ரிக்கு ஏழு ஆட்டங்களில் கிடைத்த ஆறாவது வெற்றி இது. இத்தோல்வியால் வெலன் சியா காற்பந்துக் குழு லா லீகா பட்டியலில் 13வது இடத்திற்குத் தள்ளப்பட்டது.

ரியால் மட்ரிட்டின் இஸ்கோவும் வெலன்சியா குழுவின் சன்டி மினாவும் (வலது) பந்தைத் தன் வசப்படுத்த போராடுகிறார்கள். படம்: ஏஎஃப்பி

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பெலருசின் போரிசவ் குழுவிற்கெதிரான ஆட்டத்தில் ஆர்சனலின் மூன்றாவது கோலை அடித்த சாக்ரட்டீசை (இடது) பாராட்டி மகிழும் சக வீரர் ஒபமெயாங். படம்: இபிஏ

23 Feb 2019

யூரோப்பா லீக்: பிரெஞ்சுக் குழுவுடன் மோதும் ஆர்சனல்