போர்ன்மத்திற்கு எதிராக போராடி வென்ற மான்செஸ்டர் சிட்டி

மான்செஸ்டர்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தின் மற்றோர் ஆட்டத் தில் போர்ன்மத்திற்கு எதிராக விளையாடிய மான்செஸ்டர் சிட்டி வெற்றிக்காக போராட வேண்டி இருந்தது. பெர்னார்டோ சில்வா போட்ட கோலால் 16வது நிமிடத்திலேயே முன்னிலை பெற்றது சிட்டி. அதையடுத்து லிரோய் சானே உதைத்த பந்தை போர்ன்மத் கோல் காப்பாளர் அஸ்மிர் பெகோவிச் தடுத்த நிலையில், தொடங்கியது சிட்டியின் போராட்டம். டாவிட் சில்வா களமிறக்கப்படாத தும் காயம் காரணமாக செர்ஜியோ அகுவேரோ வெளியேறியதும் சிட் டிக்குச் சவாலாக இருந்தது.

இதற்கிடையே 44வது நிமிடத் தில் கோல் போட்டு சமன் செய்தது போர்ன்மத். திணறிய சிட்டிக்கு மீண்டும் புத்துயிர் அளித்தது ஸ்டெர்லிங் போட்ட கோல். அதைத்தொடர்ந்து குண்டோகன் இன்னோர் கோலைப் போட 3=1 என வெற்றி பெற்றது சிட்டி. இதன் மூலம் இப்பருவத்தில் சொந்த மண்ணில் நடந்த அனைத்து ஆட்டத்திலும் சிட்டி வாகை சூடியுள்ளது குறிப்பிடத்தக் கது. ஐந்து புள்ளிகள் முன்னிலை யில் பட்டியலின் முதல் இடத்தில் உள்ளது சிட்டி. மற்ற ஆட்டங்களில் வெஸ்ட் ஹேமிடம் மூன்று கோல்கள் வித்தி யாசத்தில் தோற்றது நியூகாசல். கிறிஸ்டல் பேலஸ் இரண்டு கோல்கள் வித்தியாசத்தில் பர்ன்லி யை வீழ்த்தியது. ஹடர்ஸ்ஃபீல்ட்- பிரைட்டனி டம் 1-2 எனவும் வாட்ஃபர்ட் லெஸ்டர் சிட்டியிடம் 2-0 எனவும் தோற்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!