பணிப்பெண் கொடுமை: 64 வயது மாதுக்குச் சிறை

தனது தாயாரின் இந்தோனீசியப் பணிப்பெண்ணை மூன்று மாத காலம் கொடுமைப்படுத்திய ஒரு மாதுக்கு 28 வாரம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இமா ரஹ்மாவதி, 24, என்ற பணிப்பெண்ணை வேண்டு மென்றே காயப்படுத்தியதாகக் கூறும் நான்கு குற்றச்சாட்டுகளின் பேரிலும் அவரிடம் பல வந்தமாக நடந்துகொண்டதாகக்கூறும் ஒரு குற்றச்சாட் டின் பேரிலும் செப்டம்பரில் கூ மீ சூ, 64, என்ற நிலச்சொத்து முகவரான அந்த மாது குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டது. அவர் இப்போது விசாரணை கோரியிருக்கிறார்.

இந்தக் குற்றச்செயல்கள் சென்ற ஆண்டு ஜனவரி மாதத்திற்கும் ஏப்ரல் மாதத்திற்கும் இடையில் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. தனக்கு நேர்ந்த கதி பற்றி அந்தப் பணிப்பெண் பக்கத்துவீட்டில் வேலை செய்த வேறு ஒரு பணிப்பெண்ணுக்குக் குறிப்பு எழுதி தன்னுடைய நிலைபற்றி தெரியப்படுத்தினார். அதன் பிறகு அந்தப் பணிப் பெண் மீட்கப்பட்டார். பணிப்பெண்ணுக்குச் சேரவேண்டிய தொகையை கூ கொடுத்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

தண்டனை விதிக்கப்பட்ட கூ மீ சூ. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்