கடல்துறை ஊழியர் மின்னிலக்க தேர்ச்சி மேம்பட பயிற்சித்திட்டம்

சிங்கப்பூரில் கடல் மற்றும் கடலோர தொழில்துறையில் வேலை பார்க் கும் 23,000 சிங்கப்பூரர்களின் மின்னிலக்க ஆற்றலை மேம்படுத் தும் முயற்சியாக என்டியுசி ஒரு புதிய பயிற்சி செயல்திட்டத்தை நடப்புக்கு கொண்டுவந்துள்ளது. ஊழியர்கள் மற்றும் நிறுவனங் களின் தேர்ச்சிகள் மேம்பட உதவு வது அந்தத் திட்டத்தின் நோக்கம். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதன்மூலம் உற்பத்தித்திறனை எப்படி பெருக்கமுடியும் என்பதை ஊழியர்களுக்கும் முதலாளிகளுக் கும் படிப்படியாக வழிகாட்டி அந்தத் திட்டம் உதவும் என்று வேலை வாய்ப்பு, வேலை திறன் பயிற்சிக் கழகம் (e2i) தெரிவித்தது.

தேவன் நாயர் வேலை வாய்ப்பு, வேலைத் திறன் பயிற்சிக் கழகத்தில் கடல்துறை வாரம் நேற்று தொடங் கியது. அந்த நிகழ்ச்சியில் உரை யாற்றிய என்டியுசியின் தலைமைச் செயலாளர் இங் சீ மெங், இந்தப் புதிய பயிற்சி செயல்திட்டத்தில் இடம்பெறக்கூடிய நான்கு ஆற்றல் படிநிலைகள், நிறுவனங்களும் ஊழியர்களும் மின்னிலக்கத்தேர்ச்சிகளைக் கற்றுக்கொள்ள வழிகாட்டும் முன்னேற்ற மைல்கற் களாகத் திகழும் என்றார்.

கடல்துறை வார தொடக்க நிகழ்ச்சியில் காட்சிக்கூடங்களை என்டியுசியின் தலைமைச் செயலாளர் இங் சீ மெங் பார்வையிட்டார். படம்: வேலை வாய்ப்பு, வேலை திறன் பயிற்சிக் கழகம்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தமது இளமைக் காலத்தில் சிங்கப்பூர் வாழ்க்கை எப்படி இருந்தது என்பதைப் பிள்ளைகளிடம் எடுத்துக் கூறும் திரு முகம்மது ஹனிஃபா பின் ஜைனுல் அபிதீன், 72 (இடது). பிள்ளைகளோடு சேர்ந்து அந்தக் கதையைக் கேட்கிறார் அதிபர் ஹலிமா யாக்கோப் (வலமிருந்து 2வது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

20 Feb 2019

பிஞ்சு மனங்களில் பரிவை விதைக்க புத்தகம் மூலம் முயற்சி