ஏமனில் காயம் அடைந்த போராளிகளுக்கு ஐநா உதவி

ரியாத்: ஏமனில் ஹுதி போராளிகள் வசம் உள்ள பகுதியில் சவூதி ஆதரவு பெற்ற ஏமன் அரசாங்கப் படை கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. அத்தாக்குதலில் போராளிகள் தரப்பில் 50 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க ஐநா முன்வந்துள்ளது. விமானம் ஒன்றை சானா விமான நிலையத்திற்கு ஐநா அனுப்பியுள்ளது. அந்த விமானம் மூலம் காயமுற்றவர்கள் மஸ்கட் நகருக்கு கொண்டு செல்லப்படுவர் என்று சவூதி தலைமையிலான கூட்டணிப் படை தெரிவித்துள்ளது. சவூதி ஆதரவு பெற்ற ஏமன் அரசுக்கும் போராளிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ள நிலையில் காயமுற்றவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு வசதியாக விமானம் மூலம் கொண்டு செல்வதற்கு கூட்டணிப் படை அனுமதித்துள்ளது. படம்: இபிஏ