தப்பித்தோம் பிழைத்தோம் என வென்ற லிவர்பூல்

லிவர்பூல்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டமொன்றில் நேற்று அதிகாலை லிவர்பூலை எதிர்கொண்டது எவர்ட்டன் குழு. இதில் ஆட்டத்தின் பெரும் பகுதி லிவர்பூலை திக்குமுக்காட வைத்த எவர்ட்டன் இறுதியில் ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில், 96வது நிமிடத்தில், கோல்காப்பாளர் பிக்ஃபர்ட் செய்த தவற்றால் தோல் வியைத் தழுவியது. லிவர்பூல் அணி உதைத்த பந்து கோல் வலைக்கு மேலே செல்ல அதை எப்படியோ எவர்ட்டனின் கோல்காப்பாளர் பிக்ஃபர்ட் தமது கைகளால் ஆட்ட மைதானத்துக்குள், அதுவும் லிவர்பூலின் டிவோக் ஒரிகி என்ற தாக்குதல் ஆட்டக்காரருக்கு முன்னால் வந்து விழவைக்க அவரும் சர்வ சாதாரணமாக அதை கோல் வலைக்குள் போட்டு லிவர்பூலை வெற்றி பெற வைத்தார்.

அதுவரை நேற்று 232வது முறையாக இரு அணிகளும் சந்தித்ததில் ஆட்டம் சமநிலையை நோக்கி சென்று கொண்டிருந்தது. ஆனால் லிவர்பூலின் வான் டைக் அடித்த பந்து கோல் வலைக்கு மேலே சென்றுகொண்டிருந்ததை கவனித்த பிக்ஃபர்ட் அதை எப்படியோ தமது கைகளால் கீழே தள்ளிவிட அதுவும் டிவோக் ஒரிகியிடம் வந்துசேர அவரும் நன்றி சொல்லாத குறையாக பந்தை வலைக்குள் செலுத்தி வெற்றிக் களிப்பில் மிதந்தார்.

நேற்றைய ஆட்டத்தில் லிவர்பூலின் ஒரே கோலைப் போட்ட டிவோக் ஒரிகி. படம்: ராய்ட்டர்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பெலருசின் போரிசவ் குழுவிற்கெதிரான ஆட்டத்தில் ஆர்சனலின் மூன்றாவது கோலை அடித்த சாக்ரட்டீசை (இடது) பாராட்டி மகிழும் சக வீரர் ஒபமெயாங். படம்: இபிஏ

23 Feb 2019

யூரோப்பா லீக்: பிரெஞ்சுக் குழுவுடன் மோதும் ஆர்சனல்