ஏழ்மை வாட்டியது: செல்வா உருக்கம்

இளம் வயதில் சகோதரர் தனு‌ஷும் தானும் வறுமையால் வாடியதாக இயக்குநர் செல்வராகவன் கூறியிருப்பது ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது. தனது சிறுவயது அனுபவங்கள் குறித்து டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ளார். அதில் மிகக் கொடுரமான வறுமைச் சூழ்நிலையில் பிறந்து வளர்ந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். “நானும் எனது குடும்பத்தாரும் இருவேளை உணவு உண்டால் அது அரிது. எனினும் அண்டை வீட்டுக்காரர்களின் அன்பு எங்களைக் காப்பாற்றியது சமூகம் நம்மைக் கேலி செய்யும். நீயெல்லாம் என்ன சாதித்துக் கிழிக்கப் போகிறாய்? என்று கேட்பார்கள். “ஆனால், ரசிகர்கள் எனக்குத் தோள் கொடுத்து சாதிக்க வைத்தனர். எனவே, அவர்கள் மட்டுமே என் நண்பர்கள்,” என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ள செல்வராகவன் தற்போது சூர்யாவை நாயகனாக வைத்து ‘என்ஜிகே’ படத்தை இயக்கி வருகிறார். இந்தப் பதிவால் நெகிழ்ந்து போயுள்ள ரசிகர்கள் அவருக்கு ஆதர வாக சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்