‘செண்டோல்’ எங்கள் நாட்டின் இனிப்பு பானம்: மலேசிய இணையவாசிகள் கண்டனக் குரல்

அமெரிக்காவின் செய்தித்தளமான ‘சிஎன்என்’ இம்மாதம் 1ஆம் தேதி வெளியிட்ட உலகின் தலைசிறந்த 50 உணவுக்குப் பிந்திய இனிப்பு உணவுப் பட்டியலில் செண்டோல் எனும் குளிர்ந்த இனிப்புப் பானம் சிங்கப்பூரைச் சேர்ந்தது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது மலேசிய இணையவாசி களிடம் அதிருப்தி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அந்தப் பட்டியலில் நியூயார்க் கின் ‘சீஸ் கேக்’, ஹாங்காங்கின் முட்டை ‘டார்ட்ஸ்’, தாய்லாந்தின் மாம்பழச் சாதம் போன்றவை இடம்பெற்றிருந்தன. டுவிட்டர் பயனாளர் கென்னி குவேக், “இது மலேசியர்களைக் கோபப்படுத்தியுள்ளது. இந்த வட் டாரத்தைப் பற்றி நன்கு அறிந்து அதன் பின்னர் முடிவுகளை எடுக்க வேண்டும். நிச்சயமாக செண்டோல் சிங்கப்பூரிலிருந்து வந்ததில்லை,” என்று குறிப்பிட்டி ருந்தார்.

மற்றொரு டுவிட்டர் பயனாளர் எம்டிஏ மிருஸ்ரி, “மலேசிய உண வைப் பற்றி தவறான தகவலைக் கூற வேண்டாம். செண்டோல் சிங் கப்பூரிலிருந்து வந்தது அல்ல. அது மலேசியாலிருந்து வந்தது. அதில் பயன்படுத்தப்படும் கருப் பட்டி எங்கிருந்து வந்தது என்று சிங்கப்பூரர்களைக் கேளுங்கள்,” என்று கூறியிருந்தார். உணவு தொடர்பில் சிங்கப்பூரர் களுக்கும் மலேசியர்களுக்கும் இடையே சர்ச்சை எழுந்துள்ளது இது முதல் முறையல்ல.

கடந்த 2009ஆம் ஆண்டில், அப்போதைய மலேசிய சுற்றுலாத் துறை அமைச்சர் இங் யென் யென், “பல நாடுகள் மலேசியா வின் உணவுகளான ‘லக்சா’, ‘நாசி லெமாக்’ போன்றவற்றைத் தங்கள் உணவு என்று கூறிக் கொள்கிறார்கள். ஆனால், அவை எல்லாம் மலேசியாவின் உணவுகள்,” என்று கூறியிருந்தார். சிங்கப்பூரின் உணவங்காடி கலாசாரத்தை ஐக்கிய நாடுகளின் அங்கீகாரத்துக்கு இவ்வாண்டு சிங்கப்பூர் அனுப்பியபோதும் மலே சியர்கள் அதிருப்திக் குரல் எழுப் பினர்.