நிதி ஆலோசகர் லியோங் ஸீ ஹியன் மீது பிரதமர் லீயின் சட்ட நடவடிக்கை

நிதி ஆலோசகர் லியோங் ஸீ ஹியன் மீது பிரதமர் லீ சியன் லூங் சட்ட நடவடிக்கை எடுத்துள் ளார். 1எம்டிபி நிதியைக் கறுப்புப் பணத்திலிருந்து நல்ல பணமாக மாற்றுவதற்கு பிரதமர் லீ உதவி னார் என்று திரு லியோங் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியிருந்தார். கடந்த மாதம் 7ஆம் தேதியன்று அந்தப் பதிவை எழுதிய திரு லியோங், மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் திரு லீயுடன் ‘ரகசிய உடன்பாட்டை’ செய்துள் ளார் என்றும் அதன் மூலம் சிங்கப் பூர் வங்கிகள் 1எம்டிபி நிதியை கறுப்புப்பணத்திலிருந்து நல்ல பணமாக மாற்றுவதற்கு உதவியுள் ளார் என்றும் குறிப்பிட்டிருந்தார். ‘உடனடிச் செய்திகள்: சிங்கப் பூரின் லீ சியன் லூங் 1எம்டிபி புல னாய்வில் முக்கிய இலக்கு’ என் பது அந்தக் கட்டுரையின் தலைப்பு. இந்தக் கட்டுரையை மலேசியா வின் ‘தி கவரேஜ்’ இணையத்தளம் வெளியிட்டது. அதற்கு மலேசியா வில் உள்ள சிங்கப்பூர் தூதரகம் கண்டனம் தெரிவித்து, அது ஒரு பொய்யான, ஆதாரமற்ற செய்தி என்று கூறியது.

அதன் பிறகு திரு லியோங் கடந்த மாதம் 10ஆம் தேதி அந்தக் கட்டுரையை இணையத்தளத்திலி ருந்து அகற்றினார். ஆனால் அதற்குள் அந்தக் கட்டுரை குறைந்தது 18 முறை பகிரப்பட்டது. இருப்பினும், கடந்த மாதம் 12ஆம் தேதி திரு லியோங்குக்கு பிரதமர் லீயின் வழக்கறிஞர்களான ட்ரூ அண்ட் நேப்பியர் நிறுவனம் அவரது செயலுக்கு பொது மன்னிப்பு கோர வேண்டும் என்றும் பிரதமரின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தியதற்காக இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் சட் டக் கடிதம் அனுப்பியது. ஆனால் திரு லியோங் அந்தக் கடிதத்துக்கு எவ்வித பதிலும் அளிக்கவில்லை.

ஊடக கேள்விகளுக்கு விளக் கம் அளித்த பிரதமர் லீயின் ஊடகச் செயலாளர் திருவாட்டி சாங் லி லின், தமக்கு அவதூறு ஏற்படுத்திய திரு லியோங் ஸீ ஹியனுக்கு எதிராக பிரதமர் லீ சட்ட நடவடிக்கை எடுத்திருப்பதை உறுதி செய்தார். “இனி திரு லீயின் வழக்கறி ஞர்கள் சட்ட நடவடிக்கையை மேற் கொள்வார்கள். தனது நற்பெய ருக்குக் களங்கம் ஏற்படுத்தியது யாராக இருந்தாலும் அவருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்க திரு லீக்கு எல்லா உரிமை யும் உண்டு,” என்றும் திருவாட்டி சாங் கூறினார்.