அதிக சர்க்கரை கொண்ட பானங்கள் தடை செய்யப்படலாம்

அதிக சர்க்கரை அளவு கொண்ட சுவை பானங்களைத் தடை செய் யும் உலகின் முதலாவது நாடாக சிங்கப்பூர் இருக்கக்கூடும். சிங்கப்பூரில் உடல் பருமனுக் கும் நீரிழிவு பாதிப்புக்கும் மக்கள் அதிக சர்க்கரை கொண்ட உண வையும் சுவை பானங்களையும் உட்கொள்வதுதான் மிக முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சிகளில் ஒன்றாக அதிக சர்க்கரை கொண்ட சுவை பானங்களைத் தடை செய்யும் அல் லது வரி விதிக்கும் சாத் தியம் குறித்து பொதுமக்களைக் கலந்தா லோசிக்க சுகாதார அமைச்சும் சுகாதார மேம்பாட்டு வாரியமும் விரும்புகின்றன.

காப்பி, தேநீர் போன்ற ஒன்றில் திடீர் கலவை பான பாக்கெட்டுகள், சுவை பானங்கள், தயிர் சார்ந்த பானங்கள், பழச்சாறுகள் மற்றும் சோடா பானங்கள் என்று நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட்டிருக் கும் பானங்களில் உள்ள சர்க்கரை அளவைக் குறைப்பது பற்றிய தங்கள் கருத்துகளைக் கூற சுகா தார அமைச்சும் சுகாதார மேம் பாட்டு வாரியமும் பொது மக் களைக் கேட்டுக்கொள்கின்றன.

பொதுமக்கள் ஒரு நாளைக்கு உட்கொள்ளும் 12 தேக்கரண்டி அளவு சர்க்கரையில் பாதிக்கு மேற்பட்டவை சுவை பானங்களி லிருந்து வருகின்றன. நான்கில் ஓர் இனிப்பு பானத்தில் சுமார் 5.5 தேக்கரண்டி அளவு சர்க்கரை சேர்க்கப்பட்டுள்ளது.

* அதிக சர்க்கரை கொண்ட பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பானங்களை முழுமையாகத் தடை செய்தல்.

* அதிக சர்க்கரை கொண்ட பானங்களுக்கு ஒரு முறையிலான அல்லது படிப்படியான வரி விதித் தல்.

* சுவை பான பாக்கெட்டின் முன்பகுதியில் சர்க்கரை அளவை அல்லது ஊட்டச்சத்து அளவைக் கட்டாயமாக அச்சிடுதல்.

* அதிக சர்க்கரை அளவு கொண்ட பானங்கள் தொடர்பான விளம்பரங்களுக்கு சமூக ஊடகங் கள் உட்பட அனைத்து தளங்களி லும் பேருந்துகளிலும் தடை செய் தல்.

மேற்கண்ட இந்த நான்கு நட வடிக்கைகள் தொடர்பில் பொதுமக் களின் கருத்துகளை சுகாதார அமைச்சு நாடுகிறது.

பொதுமக்கள் நாள் ஒன்றுக்கு உட்கொள்ளும் 12 தேக்கரண்டி அளவு சர்க்கரையில் பாதிக்கு மேற்பட்டவை சுவை பானங்களிலிருந்து வருகின்றன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்