அணை கட்ட எதிர்ப்பு: திமுக தலைமையில் மாபெரும் போராட்டம்

திருச்சி: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசும், கர்நாடக அரசும் தமிழகத்தை வஞ்சிப்பதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார். மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதைக் கண்டித்தும், அணை கட்டுவது தொடர்பில் திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பு தல் அளித்த மத்திய அரசைக் கண்டித்தும் திருச்சியில் திமுக தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் திமுகவின் கூட்டணிக் கட்சிகளும் பங்கேற்றன. திருச்சி உழவர் சந்தைத் திடலில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக் கணக்கானோர் கலந்துகொண்டு கண்டன முழக்கங்கள் எழுப்பினர். அப்போது பேசிய ஸ்டாலின் மேகதாது அணையைக் கட்டினால் மோடியால் எந்நாளும் தமிழகத்துக் குள் நுழைய முடியாது என்றார். விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்கும் நோக்கத்துடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவ தாகக் குறிப்பிட்ட அவர், தேர்தலுக்காகவோ, அரசியலுக்கா கவோ இப்போராட்டம் நடத்தப்பட வில்லை என்றார்.

“இயற்கை என்றால் நம்மால் ஒன்றும் செய்யமுடியாது. கஜா புயலில் சிக்கித் தமிழகத்தில் 12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள் ளன. ஏற்கெனவே தமிழகம் கண் ணீரில் தத்தளிக்கிறது. இந்நிலை யில் மேகதாது அணையைக் கட்டப் போவதாக மத்திய அரசும் கர்நாடக அரசும் கூறுகின்றன. இந்த அணையைக் கட்டினால் தமிழகத்திற்குக் காவிரி தண்ணீர் கிடைக்காது,” என்றார் ஸ்டாலின். முன்னதாகப் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், கர்நாடகத் தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்பதற்காக மேகதாது அணை விவகாரத்தைப் பயன்படுத்தி பாஜக திட்டமிட்டுச் செயல்படுவதாகச் சாடினார்.

தம்பிதுரை அதிருப்தி மேகதாதுவில் அணை கட்டுவ தற்கு மத்திய அரசு உதவினால் அது தேச நலனைப் பாதிக்கும் என மக்களவைத் துணை சபா நாயகர் தம்பிதுரை கூறியுள்ளார். கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநில நலன்களைக் கருத்தில் கொள்ளாத காரணத் தால்தான் பாஜகவால் பல மாநி லங்களில் வெற்றி பெறமுடிய வில்லை என்றார். கர்நாடகத் தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு மேகதாது அணை கட்டும் திட்டத்தைக் கொண்டு வருவது சரியல்ல என் றும் அவர் கூறினார்.

திருச்சி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான தொண்டர்கள். படம்: சதீஷ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்களும் மாணவர்களும் தலையில் கட்டுப் போட்டுக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். படம்: இபிஏ

15 Jun 2019

நாளை மறுதினம் மருத்துவர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தம்