7 தமிழர்கள் விடுதலைக்கு குரல் கொடுத்த திலீபன் கைது: சமூக ஆர்வலர்கள் கண்டனம்

மதுரை: ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரை விடுதலை செய்யவேண்டும் எனும் கோரிக்கை வலுத்துள்ள நிலையில், 7 தமிழர் விடுதலை கூட்டமைப்பின் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். தமிழக அரசின் இந்தக் கைது நடவடிக்கையை சமூக ஆர்வலர் கள் கண்டித்துள்ளனர். 7 தமிழர் விடுதலைக் கூட்ட மைப்பின் மதுரை மாவட்ட பொறுப்பாளராக உள்ளார் திலீபன் செந்தில். இவரைப் போலிசார் திடீ ரென கைது செய்துள்ளனர். இத னால் சமூக ஆர்வலர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 7 தமிழர் விடுதலைக்காக மதுரையில் பல்வேறு கருத்தரங்கு கள், மனிதச்சங்கிலி ஆர்ப்பாட்டம், அஞ்சல் அட்டை அனுப்புதல், தெருமுனைக் கூட்டங்கள் என பல்வேறு நிகழ்வுகளை முன்னின்று நடத்தி வந்தார் திலீபன் செந்தில்.

இந்நிலையில் நேற்று முன்தினம் தல்லாகுளம் போலிசார் அவரைக் கைது செய்தனர். இதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள சுற்றுச்சூழல் பாது காப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன், பழைய பொய் வழக்கைக் காட்டி திலீபன் செந்திலைக் கைது செய்திருப்பதாகச் சாடியுள்ளார். 7 தமிழர் விடுதலைக்கான போராட்டமானது மதுரை மண் ணில் ஜல்லிக்கட்டு போராட்டம் போல் வீறு கொண்டு எழுவதை நசுக்கும் நோக்கத்துடன் தமிழக அரசு செயல்படுவதாக முகிலன் தெரிவித்துள்ளார்.

7 தமிழர் விடுதலை விஷயத் தில் தமிழக அரசு இரட்டை வேடம் போடுவது அப்பட்டமாகத் தெரிவ தாகக் குறிப்பிட்டுள்ள அவர், அர சின் இத்தகைய போக்கு வன்மை யாகக் கண்டிக்கத்தக்கது என்றார். “திலீபன் செந்திலின் செயல் பாடுகளை முடக்கவும், போராட் டங்களை நீர்த்துப் போகச் செய்ய வும் அரசு முயல்கிறது,” என்றும் முகிலன் மேலும் சாடியுள்ளார். இதேபோல நீட், ஆணவக் கொலைகள், ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வந்த திமுக மதுரை மாவட்ட செயலாளர் மணி அமுதனும் அண்மையில் கைதானார். 78 நாட்களுக்குப் பிறகு தற்போது பிணையில் வெளி வந்துள்ளார். இந்நிலையில், திலீபன் செந் திலையும் போலிசார் திடீரெனக் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கைது செய்யப்பட்ட திலீபன் செந்தில். படம்: தகவல் ஊடகம்