எச்.டபிள்யு. புஷ் மறைவு; டிரம்ப் அஞ்சலி

வா‌ஷிங்டன்: மறைந்த முன்னாள் அதிபர் ஜார்ஜ் எச்.டபிள்யு. புஷ்‌ஷுக்கு அதிபர் டிரம்ப்பும் அவரது துணைவியார் மெலானியாவும் நேரில் வந்து இறுதி அஞ்சலி செலுத்தினர். பொதுமக்களின் அஞ்சலிக்காக இன்று வரை திரு புஷ்‌ஷின் நல்லுடல் தலைநகரில் உள்ள ரோடண்டாவில் வைக்கப்பட்டிருக்கும். கடந்த வெள்ளிக் கிழமை 94 வயது புஷ் காலமானார். டெக்சாஸ் வீட்டில் அவரது மனைவி பார்பராவுக்கு அருகே புஷ் அடக்கம் செய்யப்படுவார்.