போயிங் விமானங்களை ரத்து செய்ய ‘லயன் ஏர்’ திட்டம்

பாரிஸ்: போயிங் நிறுவனத்திடமிருந்து விமானங்களைத் தருவிக்கும் உத்தரவை ரத்து செய்ய இந்தோனீசியாவின் லயன் ஏர் நிறுவனம் யோசனை செய்துவரு கிறது. அக்டோபர் மாதம் நிகழ்ந்த லயன் ஏர் விமான விபத்தில் 189 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து லயன் ஏர் நிறுவனமும் போயிங் நிறுவனமும் ஒன்றையொன்று குற்றம் சாட்டி வருகின்றன. ஒரு கட்டத்தில் பராமரிப்பு, விமானிகளின் நடவடிக்கை தொடர்பாக லயன் ஏர் நிறுவனம் கண்காணிக்கப்பட்டு வருவதாக போயிங் கூறியிருந்தது.

இதனால் எரிச்சல் அடைந்த ‘லயன் ஏர்’ குழுமத்தின் இணை நிறுவனர்களில் ஒருவரான ருஸ்டி கிரானா, அண்மையில் போயிங் விமானத்தில் வடிவமைப்பு மாற்றம் செய்யப்பட்டதை திசை திருப்பும் நோக்கில் போயிங் தங்கள் மீது குற்றம்சாட்ட முயற்சி செய்கிறது என்று கூறினார். இந்நிலையில் போயிங் விமானங்களை எதிர்காலத்தில் வாங்குவதும் மறுபரிசீலனை செய்யப்படும் என்று அவர் குறிப் பிட்டார். இதற்கிடையே ஏற்கெனவே பிறப்பித்துள்ள கொள்முதல் உத்தர வுகளையும் ரத்து செய்ய லயன் ஏர் நிறுவனம் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.