கோயில் கலவரம்; நால்வர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூர்: சிலாங்கூர் சுபாங் ஜெயாவில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் கலவரம் செய்ததாகவும் பயங்கர ஆயுதங் களைப் பயன்படுத்தியதாகவும் நேற்று நான்கு ஆடவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. முகம்மது ரிட்சுவான் சேக் ரஸ்லான், 26, இர்வான் நூர்தீன், 38, முகம்மது கைரி அப்துல் ர‌ஷித், 24, ரோஸைஹான் ஜமா லுதீன், 28, ஆகியோரே குற்றம் சாட்டப்பட்ட நால்வர். மலேசியாவில் சமயப் பதற்றத்தை உருவாக்கிய அந்தச் சம்பவத்தில் குற்றம் சாட்டப்படும் முதலாமவர்கள் அவர்கள். இன்னும் தலைமறைவாக உள்ள பலருடன் சேர்த்து இந் நால்வர் மீதும் அமர்வு நீதிமன்றத் தில் குற்றம் சுமத்தப்பட்டு உள்ளது. கலவரத்தின்போது இந்த நால் வரும் சம்பவ இடத்தில் இருந்த தாகவும் கோடரி, அரிவாள் போன்ற ஆயுதங்களை வைத்திருந்ததாகவும் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டன.

ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத் தில் நவம்பர் 26ஆம் தேதி அதி காலை 2 மணிக்கும் 5 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் குற்றச் சம்பவம் நிகழ்ந்ததாக நீதிமன்றத் தில் தெரிவிக்கப்பட்டது. குற்றவியல் தண்டனைச் சட்டப் பிரிவு 148ன் கீழ் குற்றம் சாட்டப் பட்டுள்ளதால் இவர்களுக்கு அதிகபட்சமாக ஐந்து ஆண்டு வரையிலான சிறைத் தண்டனை, அபராதம் அல்லது இந்த இரண்டும் விதிக்கப்படலாம்.

கலவரத்தில் தீக்கிரையாக்கப்பட்ட வாகனத்தை ஆய்வு செய்யும் அதிகாரிகள். கோப்புப் படம்: இபிஏ