பிரதமர் மேவுக்கு இறுதி சோதனை

லண்டன்: ஐரோப்பிய ஒன்றியத்தி லிருந்து வெளியேறுவதற்கான தனது திட்டத்திற்கு நாடாளுமன்ற ஒப்புதலைப் பெறுவதற்காக பிரிட் டன் பிரதமர் தெரேசா மே இறுதிக் கட்ட முயற்சியில் ஈடுபடவிருக் கிறார். அவரது ‘பிரக்சிட்’ உடன்பாடு நாடாளுமன்றத்தில் ஐந்து நாட்கள் விவாதிக்கப்படும். ஒவ்வொரு நாளும் எட்டு மணி நேரத்துக்கு மேல் விவாதம் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. இதையடுத்து வரும் செவ் வாய்க்கிழமை நாடாளுமன்ற உறுப் பினர்கள் வாக்களிக்கவிருக்கின்றனர்.

ஐரோப்பிய ஒன்றியமும் பிரிட்டனும் பேச்சு வார்த்தைக்குப் பிறகு இறுதி செய்துள்ள ‘பிரக்சிட்’ திட்டத்தை பெரும்பாலான நாடாளு மன்ற உறுப்பினர்கள் ஆதரிப்ப தாகக் கூறப்படுகிறது. இதனை உறுப்பினர்கள் வாக் கெடுப்பு மூலம் உறுதி செய்தால் அடுத்த ஆண்டு மார்ச் 29ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வரும். ஆனால் ‘பிரக்சிட்’ உடன்பாடு தொடர்பான சட்ட ஆலோசனை விவரங்களை பிரதமர் மே தரப் பினர் வெளியிடவில்லை. இதனால் எதிர்க்கட்சிகளிடம் இருந்து அவர்கள் நெருக்கடியைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர். கடந்த திங்கட்கிழமை அர சாங்கத்தின் தலைமை சட்ட ஆலோசகரான தலைமை சட்ட அதிகாரி ஜியோஃப்ரி காக்ஸ் தனது சட்ட ஆலோசனைகளை வழங்கியிருந்தார்.