மீண்டும் ஜெனிலியா

கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார் ஜெனிலியா. நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கைத் திருமணம் செய்துகொண்ட பிறகு திரையுலகை விட்டு ஒட்டுமொத்தமாக விலகியவர், தற்போது கணவர் நடிக்கும் படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடுகிறார். இதையடுத்து, அவர் தொடர்ந்து படங்களில் நடிக்க கணவரின் குடும்பத்தார் சம்மதித்துள்ளனராம். இனி ஜோதிகா, சமந்தா போல் இவரும் தனக்கு முக்கியத்துவம் தரக்கூடிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளார்.