காதல், கணினியை இணைக்கும் படம்

காதல் என்பதைக் காலம் தான் நிர்ணயிக்கும் எனும் கருத்தை வலியுறுத்தி உருவாகிறது ‘இதுதான் காதலா’. காதலையும் கணினி யையும் இணைத்து புதிய பாணியில் திரைக்கதை அமைத்துள்ளாராம் இயக்குநர் ராஜசிம்மா. படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல் கள் ஆகியவற்றுக்கும் இவரே பொறுப்பேற்றுள்ளார். தயாரிப்பாளரும் இவர்தான். கதாநாயனாக சரண், நாயகிகளாக அஷ்மிதா, ஆயிஷா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் இயந்திர மனிதன் வேடத்தில் ராஜ சிம்மாவும் பயில்வான் ரங்கநாதன், ‘காதல்’ சுகுமார், கூல்சுரேஷ், சின்ராஜ் உள்ளிட்டோர் கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.