வசதிகுறைந்த மாணவருக்கு உதவ மின்கழிவு மறுசுழற்சி

மின்கழிவை ரொக்கமாக மாற்றும் ஓராண்டு இயக்கத்தின் விளை வாக எதிர்பார்க்கப்பட்டதைவிட நான்கு மடங்கு அதிகமான பழைய மின்னியல் சாதனங்களை ஏற்பாட் டாளர்கள் சேகரித்துள்ளனர். இவ்வாண்டு ஜனவரியில் தொடங்கப்பட்ட ‘The HP Make IT Green’ இயக்கம், ஒட்டுமொத்த மாக 50,000 கிலோ கிராம் எடை கொண்ட பயன்படுத்தப்பட்ட கணி னிகள், மடிக்கணினிகள், கணினி திரைகள் உள்ளிட்டவற்றை இங்கு உள்ள ஆறு சமூக நிலையங்களிலும் 24 பள்ளிகளிலும் சேகரிக்க இலக்கு நிர்ணயித்திருந்தது.

இந்நிலையில், இம்மாத இறுதி வரை நடைபெறவிருக்கும் இந்த இயக்கத்தில் இதுவரை 200,000 கிலோ கிராம் அளவிலான மின் கழிவு சேகரிக்கப்பட்டுள்ளது. மறுசீரமைக்கப்பட்ட மின்னியல் சாதனங்களை விற்று அதன்மூலம் திரட்டப்பட்ட நிதியைக் கொண்டு ‘எச்பி’ மென் பொருள் நிறுவனம், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பள்ளிக் கைக்காசு நிதிக்கு $50,000 நன்கொடை வழங்கியது. ‘எச்பி சிங்கப்பூர்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் லயனல் சங், அத்தொகைக்கான காசோலையை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழின் ஆசிரியர் வாரன் ஃபெர்ணான்டெசி டம் வழங்கினார்.

‘எச்பி சிங்கப்பூர்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் லயனல் சங் (நடுவில்), ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழின் ஆசிரியரான வாரன் ஃபெர்ணான்டெசிடம் காசோலையை வழங்கினார். (இடக்கோடியில்) பயன்படுத்தப்பட்ட மின்னியல் சாதனங்களின் பாகங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ‘ரோபோ’. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பிள்ளைகள் ஆரோக்கியமாக இருப்பதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்று நேற்று வடகிழக்கு வட்டார மேயர் டெஸ்மண்ட் சூ கூறினார். படம்: 'கெல்லோக்ஸ்'

21 Jul 2019

ஆரோக்கிய உணவுப் பழக்கத்தை ஊக்குவிக்கும் ஓராண்டு திட்டம்

தொண்டூழியர்கள், அதிபர் சவால் நன்கொடைத் திட்டம் மூலம் பயனடைந்து வருபவர்கள் ஆகியோருடன் திருவாட்டி ஹலிமா சந்தித்துப் பேசியதுடன் தெரு காற்பந்து, கூடைப்பந்து, வலைப்பந்து, நடனம் போன்ற பல அங்கங்களில் பங்கேற்றார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

21 Jul 2019

அதிபர் ஹலிமா யாக்கோப்: சமூகத்திற்கு ஆதரவு அளிக்க இளையர்கள் முன்வர வேண்டும்