பராமரிப்புச் சேவை வழங்குவோருக்கு ரெட்ஹில் வட்டாரத்தில் புதிய இடவசதி

உடற்குறை உள்ளோருக்கும் சிறப்புத் தேவை உடையோருக்கும் பராமரிப்புச் சேவை வழங்குபவர்களுக்கு ஆதரவு வழங்க புதிய இடவசதி ரெட்ஹில் வட்டாரத்தில் திறக்கப்பட்டுள்ளது. அங்குள்ள ‘எனேப்ளிங் வில்லேஜ்’ பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ‘Caregivers Pod’ எனும் இந்த இடத்தில் பராமரிப்புச் சேவை வழங்குவோர், ஆதரவுக் குழுக்கள் வழங்கும் பல்வேறு நடவடிக்கைகளில் கலந்துகொண்டு சிறந்த பராமரிப்பை வழங்குவதற்கான பயிற்சியையும் பெறலாம். பராமரிப்புச் சேவை வழங்குவோர் புதிய திறன்களைக் கற்றுக்கொடுக்கவும் அவர்களுக்கு ஆதரவு நல்கவும் இதுபோன்ற இடவசதி அமைக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை. இந்த வசதியைப் பயன்படுத்துவதற்கு அனுமதி இலவசம். இதற்கு ‘எஸ்ஜி எனேபள்’ அமைப்பில் பதிவுசெய்துகொண்டால் போதும். இந்த இடத்திற்கு வருவோரை ஏற்றிச் செல்ல ரெட்ஹில் எம்ஆர்டி நிலையத்திலிருந்து இணைப்புச் சேவை பேருந்து இயக்கப்படுகிறது.

இதுபோன்ற இடவசதி அமைக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்