திரிஷாவின் மனம் கவர்ந்த நியூயார்க்

திரிஷாவை இப்போதெல்லாம் பொதுவெளியில் அதிகம் பார்க்க முடிவதில்லை. முன்பு ஃபேஷன் நிகழ்ச்சிகளில் அவ்வப்போது தலைகாட்டுவார். இப்போதோ ஓய்வு கிடைத்தால் ஏதேனும் வெளிநாட்டுக்குப் பறந்துவிடுகிறார். முன்பெல்லாம் ஒவ்வொரு ஆண்டும் தன் தோழிகளுடன் லண்டன், பாரிஸ் என்று பறந்தவர் தற்போது எங்கும் தனியாகத்தான் செல்கிறாராம். ‘96’ படத்தில் ஜானு கதாபாத்திரத் தில் நடித்த வகையில் பலரது பாராட்டுகளும் குவிந்திருக்கின்றன. இந்த உற்சாகத்தில் நியூயார்க் சென்று வந்திருக்கிறார். “அங்கு எனக்கு நிறைய நண்பர்கள் உள்ளனர். அதனால் ஒரு மாதம் தங்கினாலும் நேரம் போவதே தெரியாது. எனக்குப் பிடித்தமான நகரங்களின் பட்டியலில் மற்ற உலக நகரங்களைப் பின்னுக்குத் தள்ளி நியூயார்க் முதலிடம் பிடித்துள்ளது. இனி அடிக்கடி அங்கு செல்வேன்,” என்று கண் சிமிட்டுகிறார் திரிஷா.