திரையில் மீண்டும் மோதிக்கொள்ளும் இரு கதாநாயகர்கள்

தனுஷ், சிவகார்த்திகேயன் இடையே மீண்டும் மறைமுக மோதல் ஏற்பட்டுள்ளதாகக் கோடம்பாக்க வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன. பெரிதாக ஒன்றுமில்லை. தனுஷ் நடித்துள்ள ‘மாரி-2’ படம் எதிர்வரும் 21ஆம் தேதி வெளியாகிறது. அதே தினத்தன்று சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘கனா’ படத்தையும் களம் இறக்குகின்றனர். மேலும் ஜெயம் ரவியின் ‘அடங்க மறு’, விஷ்ணு விஷாலின் ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’, விஜய் சேதுபதியின் ‘சீதக்காதி’ ஆகிய படங்களும் வெளியாகின்றன. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நான்கு படங்களுக்கே திருப்தி தரும் எண்ணிக்கையில் திரையரங்குகள் கிடைக்காத நிலையில் சிவாவும் தன் பங்குக்கு ‘கனா’வைக் களம் இறக்குவது தனுஷ் தரப்புக்கு அதிருப்தி ஏற்படுத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது. எனினும் ‘மாரி-2’ வெளியீட்டுத் தேதியில் எந்தவித மாற்றமும் இருக்காது என அப்படக்குழுவினர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.