உடற்பயிற்சியில் அசத்தும் ரகுல் பிரீத்

இன்றுள்ள இளம் நடிகைகள் உடல்நலத்தில் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றனர். அத்தகைய நடிகைகளின் பட்டியலில் ரகுல் பிரீத் சிங்குக்கு நிச்சயம் முதலிடம் கொடுக்கலாம். தினமும் அதிகாலை வேளை யிலேயே உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்து விடுகிறார். இவருக்கு இரண்டு பயிற்சியாளர்கள் உள்ளனர். காலை 5 மணிக்கெல்லாம் இருவரும் உடற்பயிற்சி கூடத்திற்கு வந்துவிடுவார்களாம். அதற்குபிறகு பல்வேறு விதமான உடற்பயிற்சிகளை ரகுலுக்குச் சொல்லித் தருகின்றனர். எடை தூக்குதல், குறிப்பிட்ட கிலோ மீட்டர் தூரம் ஓடுவது, யோகாசனம் என பல்வேறு கடினமான விஷயங்களைச் செய்ய வேண்டி இருக்கும். சற்றே சலிப்பாக உணர்ந்தாலும் தமக்குத் தெரிந்த அனைவரும் நேரில் பார்க்கும்போது, “உங்கள் உடல்வாகு கச்சிதமாக இருக்கிறது என்று சொல்வதைக் கேட்கும்போது உற்சாகமாக இருக்கும். மனதில் தோன்றிய சலிப்பும் பறந்தோடிவிடும்,” என்கிறார் ரகுல் பிரீத் சிங்.