கோஹ்லியைக் காலி பண்ண ஆஸ்திரேலிய அணி வியூகம்

அடிலெய்டு: விராத் கோஹ்லி தலை மையிலான இந்திய கிரிக் கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதலில் நடந்த 20 ஓவர் போட்டித் தொடர் 1=1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. அடுத்ததாக இந்தியா= ஆஸ்திரேலிய அணிகள் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதுகின்றன. 'ஆலன்=பார்டர்' கிண்ணத் திற் கான இந்தத் தொடரின் முத லாவது டெஸ்ட் போட்டி அடிலெய் டில் இன்று தொடங்குகிறது. ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடுவது ஒரு போர் போன்றே வர்ணிக்கப்படு வது உண்டு.

அங்கு 1947ஆம் ஆண்டில் இருந்து 11 முறை டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ள இந்திய அணி ஒரு முறை கூடத் தொடரைக் கைப்பற்றியதில்லை. தற் போது ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரர்களான ஸ்டீவன் சுமித்தும், டேவிட் வார்னரும் பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கி தடையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார் கள். இதனால் ஆஸ்திரேலிய அணி கொஞ்சம் பலவீனமடைந்துள் ளது. இதை சாதகமாகப் பயன் படுத்தி இந்திய அணி புதிய வரலாறு படைக்குமா? என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி நிற் கிறது.

இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லியின் பந்தடிப்பைத் தான் மலை போல் நம்பி இருக்கி றது. 2014-15ஆம் ஆண்டு அங்கு சென்ற போது 4 சதங்கள் உள்பட 692 ஓட்டங்கள் குவித்துப் புதிய உச்சத்தைத் தொட்டார். 'ஓட்டம் குவிக்கும் எந்திரம்' என்று அழைக் கப்படும் கோஹ்லி தான், ஆஸ் தி ரேலிய பவுலர்களின் முக்கிய எதிரியாகப் பார்க்கப் படுகிறார். பந்து வீச்சில் வேகப்பந்து வீச் சாளர்கள் மிட்செல் ஸ்டார்க், கம் மின்ஸ், ஹேசில்வுட், பீட்டர் சிடில் உள்ளிட்டோர் சொந்த ம ண் ணி ல் அ பா ய க ர மா ன வ ர் க ள் . பந்தடிப்பில் உஸ்மான் கவாஜா ஆணி வேராக விளங் குகிறார். கோஹ்லியை எப்பாடு பட்டாவது வெளியாக்கிவிட வேண்டும் என் பதே ஆஸ்தி ரேலிய அணியின் இலக்காக உள்ளது. அதற்காக ஆஸ் திரேலிய அணியின் முன் னாள் வீரர் களும் ஏராளமான ஆலோ சனைகளை வழங்கி வரு கின்றனர்.

விராத் கோஹ்லி. படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!