கவுதம் காம்பீர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

புதுடெல்லி: இந்திய அணியின் முன்னணிப் பந்தடிப்பாளராகத் திகழ்ந்த கவுதம் காம்பீர், கிரிக் கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள் ளார். இந்திய அணி 2007ல் டி20 உலகக் கிண் ணத்தை வெல்லும் போது 57 ஓட் டங்கள் அடித்து முத் திரை பதித் தார். 2011ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கிண் ணத்தை வெல்லும் போது 97 ஓட்டங்கள் குவித்து முத்திரை பதித்தார். கடந்த 15 ஆண்டு களாக விளையாடி வரும் கவுதம் காம் பீருக் குக் கடந்த சில ஆண்டு க ளாக அனைத்துலக அணியில் இடம் கிடைக்கவில்லை. கடைசி யாக 2016ஆம் ஆண்டு ராஜ் கோட்டில் நடைபெற்ற இங்கிலாந் திற்கு எதிரான டெஸ்டில் விளை யாடினார். 37 வயதாகும் கவுதம் காம்பீர் கடந்த 2003ஆம் ஆண்டு இந்திய ஒருநாள் அணியில் அறிமுகம் ஆனார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்