இறந்த பெண்ணுடைய கருப்பை மூலம் பிறந்த முதல் குழந்தை

சாவ் பாவ்லோ: பிரேசிலில் ஒரு பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் இறந்த பெண்ணுடைய கருப்பை பொருத்தப்பட்டிருந்தது. அந்தப் கருப்பையில் வளர்ந்த பெண் குழந்தை உயிருடன் பிறந்து தற்போது நலமாக இருக்கிறது. மருத்துவ உலகைப் பொறுத்த வரையில் இது ஒரு புதிய சாதனையா கக் கருதப்படுகிறது. இதற்கு முன்பாக அமெரிக்கா, செக் குடியரசு, துருக்கி ஆகிய நாடுகளில் இதுபோன்ற முயற் சிகள் 10 முறை மேற்கொள்ளப்பட்டு அத்தனையும் தோல்வியில் முடிந்த ன.

அவற்றில் குழந்தை எதுவும் உயிர்பிழைக்கவில்லை. இந்த முறை வெற்றிகரமாக நடைபெற்ற கருப்பை மாற்று அறுவை சிகிச்சை குறித்து 'தி லான்செட்' எனும் மருத்துவ சஞ்சி கையில் விவரிக்கப்பட்டுள்ளது. தாயாரின் பிரசவக் காலம் 35 வாரங்களான நிலையில், ‘சிசே ரியன்’ அறுவை சிகிச்சை மூலம் பெற்றெடுக்கப்பட்ட இந்தக் குழந் தையின் எடை 2.55 கிலோ கிராம். தற்போது நடப்பில் உள்ள மருத்துவ நடைமுறையின்படி, உயி ருடன் உள்ள குடும்ப உறுப்பினர் ஒருவரிடமிருந்தே கருப்பை நன் கொடையாகப் பெறப்பட்டு பொருத்த ப்படுகிறது. கருப்பை பிரச்சினைகளால் பிள்ளை பெறச் சிரமப்படும் பெண் களுக்கு இந்த அறுவை சிகிச்சை யின் வெற்றி, நம்பிக்கையளிக் கக்கூடும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இறந்த பெண்ணுடைய கருப்பை மூலம் பிறந்த குழந்தையை சாவ் பாவ்லோ பல்கலைக்கழக மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவக் குழுவினர் மகிழ்ச்சியுடன் பார்க்கின்றனர். படம்: ராய்ட்டர்ஸ்